அமாவாசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

பொங்கல் லீவு முடிஞ்சி நாளைக்கு ஆபிஸ் போகனும். க்ளியர் பண்ண வேண்டிய அக்கவுண்ட்ஸ் நெறைய இருக்கு. அத பத்தி போன் பண்ணி என் ஜூனியர் முனுசாமிக்கிட்ட கேட்டேன்.

ஒரே வார்த்தைல தெரியல சார் மறந்துடுச்சினு சொல்லிட்டான். வந்த கோவத்த அடக்கி வச்சிட்டு.. சரி ஆபிஸ் டூர் எப்போ போகுறோம்னு சும்மா கேட்டு பாத்தேன்.

அதுக்கு அவன் இன்னும் 6 அமாவாசை இருக்குனு கரெக்டா சொல்றான்.. இதெல்லாம் தெரிது.. அக்கவுண்ட்ஸ் தெரிய மாட்டேங்குதே முனுசாமினு கேக்குறேன். சிரிச்சிட்டு போன வச்சிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க..

கோவிந்தராஜ்

Social media என்பது,
நாம குடியிருக்கும் வீடு மாதிரி இருக்க கூடாது.
எப்பவாச்சும் போற சுற்றுலா தளம் மாதிரி இருக்கணும்..
அப்போ தான் வாழ்க்கையில் முன்னேறலாம்.

parama

பந்து பழசாயிட்டா சிராஜ் பவுலிங் எடுபடறதிலை அதனால தான் one day டீம்ல எடுக்கலன்னு ரோஹித்தான் சொன்னதை நினைச்சு நீங்க எல்லாரும் வருத்தப்படறீங்க..

எவ்வளவு பழசுன்னு கேட்டுருந்தா 50 ஓவருக்கு அப்புறம்னு சொல்லிருப்பான், நல்லவேளை யாரும் கேட்கலைன்னு நான் சந்தோசப்படறேன்..

Mannar & company™🕗

ஆண்களுக்கு சலூன்கடை மாறிக்கிட்டே இருக்கத் தோணும்,
பெண்களுக்கு டைலர்கடை மாறிடக் கூடாதுன்னு தோணும்..

இரண்டும் நடக்காது!

ArulrajArun

Long leave க்கு அப்புறம் வேலைக்கு போறது கூட சமாளித்துவிடலாம்

ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து வரும் பாருங்க ஒரு தூக்கம்…

anvar

வடக்குப் பக்கத்தில் தலைவச்சிப் படுக்கக்கூடாதுன்னு சொன்ன நமக்குதான்,
இன்னிக்கு நாம கால் வைக்கும் இடமெல்லாம் வடக்குப் பக்க ஆட்கள்!!

SARO

பொறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போற மாதிரி பொங்கல் லீவு முடிஞ்ச பின்பு ஆபீஸ் போறது..

எது எது எங்க இருக்கும்னு யோசிக்கனும்.

amudu

மனைவிகளிடம் கணவர்கள் சொல்லும் “ம்” தன் அரை மாத்திரை அளவிலும் குறைந்து ஒலிக்கும்.

கணவர்களிடம் மனைவிகள் சொல்லும் “ம்” தன் அரை மாத்திரை அளவினை தாண்டி, ஐந்து மாத்திரை அளவிற்கு கூட ஒலிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share