இன்னைக்கு புத்தாண்டு பொறந்துடுச்சி.. பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கலாம்னு… பிரண்டு வீட்டுக்கு போனேன்.
அங்க போனா அவனோட பாட்டி, “டேய் முத்து… விடாமுயற்சியோட படிச்சி, வாழ்க்கைல ஜெயிச்சிருடா’னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்துச்சி.. ஆனா அத கேட்டுட்டு இருந்த என் பிரண்ட் சோகமா இருந்தான்.
’டேய் பாட்டி, நல்லா வார்த்தை தானே சொல்லிச்சி… அதுக்கு போய் ஏண்டா சோகமா இருக்க?’னு கேட்டேன்.. அதுக்கு அவன்… போடா டேய்… ‘நான் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகல’னு சோகத்துல இருக்கேன்… இதுல பாட்டி வேற வந்து அதயே சொல்லுது… வலிக்குதுடா’னு சொன்னான்.
’ஏண்டா நாலு பாடத்துல பெயில் ஆயிருக்க, அது உனக்கு வலிக்கல… பாட்டி விடாமுயற்சியோட படினு சொன்னது உனக்கு வலிக்குதா?’னு கேட்டேன்… வெறுத்து போய் கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

சரவணன். ????
“கண்ணாடி பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது” – இபிஎஸ்.
திமுக கட்டி முடிக்கட்டும்னு காத்துகிட்டு இருந்தீங்களாக்கும்..! ~ மக்கள்

Dr.Aravind Raja
New year Resolution –
நல்லா சம்பாதிக்கணும்
வீடு வாங்கணும்
கார் வாங்கணும்..etc
மினிஸ்டர் நிர்மலா ~ ரொம்ப ஆசப்படுறான்… போடு ஜிஎஸ்டிய…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எலேய் சின்னச்சாமி மவனே.. ஏன்டா படத்தை ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டு ரிலீஸ் பண்ணாம தள்ளி தள்ளி போடறீங்க..?
தள்ளி போடாம..? நாங்க தான் படத்தை யாரும் பார்க்க விடாம முயற்சி பண்ணுவோம்னு பட டைட்டில்லயே சொல்லிட்டோமே..

Sasikumar J
நியூ இயர்க்கு ஆட்டோமேட்டடு மெசேஜ் 50 வருவது பெரிய விஷயம் இல்ல அன்பனவங்க கிட்ட இருந்து வர ஒரு மெசேஜ் எல்லாத்தையும் விட ரொம்ப பெருசு…!

Mannar & company™????
உறுப்பு தானம் அறுவை சிகிச்சைக்கு 18% ஜிஎஸ்டி. – செய்தி!
ஒரு கிட்னி எடுத்தாச்சி இன்னோன்னையும் எடுக்காம விட மாட்டேன் மொமண்ட் !!

✒️Writer SJB✒️
வாழ்க்கை என்பது இந்த டெய்லி காலண்டர் மாதிரி தான் வருடத்தின் முதல் நாள் வண்ணமயமாக இருக்கும் அடுத்த நாளே பிளாக் அண்ட் ஒயிட்டுக்கு மாறிவிடும்????

கடைநிலை ஊழியன்
2025 day 1 – இந்த வருஷம் பொறுப்பா வேல பாக்கணும்.. மேனேஜர் சொல்றத கேட்டு முன்னேறணும்..
from day 2 – அவன் கிடக்குறான்….. ஓவர் டைம் வேல பாக்க சொல்றான்..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!
500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? : அண்ணாமலை கேள்வி!