update kumaru November 30

லேசான மழை… கன பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

அண்ணாமலை என்னடான்னா மழை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பாடுபடுறாங்கனு பாராட்டியிருக்காரு.

ஆனா அண்ணாமலை பக்கத்துலயே நிக்குற பிஜேபி கரு. நாகராஜன் சென்னையில மழை தேங்கலைனு சொல்லி நடிக்கிறாங்கனு பேசியிருக்காரு.

அட உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்கண்ணா… மழை லேசா பெஞ்சாலே பாலிடிக்ஸ் பலமா இருக்கு. இதுல கன மழைன்னா கேக்கணுமா?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Cheems..

சென்னையை மீட்ட திமுக..

சென்னை என்ன சேட்டு கடையிலயாடா இருந்துச்சு.. மீட்க..

ஏதாவது சொல்லனும்னு சொல்றது..

Mannar & company

ஏர் இண்டியா என்ற பெயர் கொண்ட நீ, மழை நீரை ஒழுக விட்டபடி சென்றதால்
இன்று முதல் நீ “நீர் இண்டியா “என அன்போடு அழைக்கப்படுவாய்!

Writer SJB

எனக்கு என்ன நோய்னு கண்டுபிடிச்சி சொல்லுங்கள் வக்கீல் சார்..

அதுக்கு நீங்க டாக்டர் கிட்ட போகாம இங்க எதுக்கு வந்தீங்க..?

அங்க நிறைய டெஸ்ட் எடுக்க சொல்றாங்க செலவு அதிகமாகும் நீங்களே கூகுள்ல பாத்து சொல்லுங்க வக்கீல் சார்..!!!

ஜோ

நான் இறந்தால் என்னை தெலுங்கானாவில் அடக்கம் செய்ய வேண்டும் ~ ஜீ

~ மேடம், இது நடிப்பு மேடம்.. எலெக்சன் வந்துட்டா போதும் தெலுங்கானால அடக்கம் பண்ணுங்க, எரிங்கன்னு டச் பண்ற மாதிரி பேசுவார்.

எலெக்சன்ல ஜெயிச்சிட்டார்ன்னு வைங்க, தெலுங்கானாவையே அடக்கம் பண்ணிருவார் மேடம்..

வி.என்.சரவணன்
போதும், போதும்!.
லிஸ்டு ரொம்ப பெரிசா போயிட்டேயிருக்கு!!.
இனி, அந்த ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்காதவர்கள் பெயரை மட்டும் சொல்லவும்!.

black cat 2

சொந்தக்கார பையன் ஞானவேல்னு ஒருத்தன் வந்தான் சார்… இராமாயணம், பாரதம் பேசி கட்டி காப்பாத்தின
எல்லாத்தையும் ஒரே இன்டர்வியூ லா நாசம் பண்ணி மொத்தமா ஊதிட்டான் சார்…

மகோரா ரசிகன்

ஒடம்புக்கு சரில்லைனா ஏன் ஆஸ்பத்திரிக்கு போற, அதான் கூகுள் இருக்குல…

அதானப்பா இது தெரியாம டாக்டருக்கு 700 ரூபா பீஸை குடுத்துட்டேன்.

Villainism

அறிக்கைன்னா முன்னாடிலாம் இளையராஜா பாட்டு லிரிக்ஸ் மாதிரி “அன்புடையீர் வணக்கம் மதிப்பிற்க்குறிய”னு ஆரமிப்பாங்க,
ஆனா சமுத்திரகனி  இப்போல்லாம் “இங்க பாரு இந்த பேச்சல்லாம் ஏன்கிட்ட வேணாம் உன் இஷ்டத்துக்கு பேசாதனு” அநிருத் பாட்டு லிரிக்ஸ் மாதிரி ஆரமிக்கிறாரு…

update kumaru November 30

மெக்கானிக் மாணிக்கம்..

நாம் டம்ளர் தும்பி:

அது துவாரகாவே இல்ல, யாரு எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பக்கூடாது. ஆராஞ்சு பார்த்துதான் நம்பணும்.

அடேய் தும்பி, இந்த “அறிவை” சீமான் ஆம கதை, 60 ஆயிரம் யானை கதை சொல்லும் போது வாடகைக்கு விட்டுருந்தியா..??

update kumaru November 30

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச

அவன் வந்துட்டானா..?

எவன்?

அதான்யா.. சுரங்கப்பாதைல சிக்கின தொழிலாளர்களை மீட்டதுக்கு சின்சியரா வாழ்த்து தெரிவிக்க போற வருங்கால பிரதமரை அவருக்கே தெரியாம போட்டோ ஷூட் பண்ண எந்நேரமும் கேமராவும் கையுமா திரிவானே அந்த கேமராமேன்

Dr.Crow

ஈழம் வாங்கி தருவேன்னு சீமான் சொன்னா நம்புறானுங்க,

நான்தான் பிரபாகரன் பொண்ணுன்னு, துவாரகா சொன்னா நம்ப மாட்டேங்குறானுங்க.

update kumaru November 30
Kirachand
மழைக்கு பயங்கரமா லீக் ஆகியிருச்சி மாமா…
வீடா மாப்ள?
பிளைட் மாமா…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப் 

வெதர் ரிப்போர்ட்: நடைபயணத்தை ஒத்திவைத்த அண்ணாமலை 

எக்ஸிட் போல் பலிக்குமா? 2018 சொல்லும் மெசேஜ்!

+1
0
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *