சட்டமும் மருத்துவமும் சந்திக்கும் புள்ளிதான் செந்தில்பாலாஜி கேஸ்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

செந்தில்பாலாஜி கேஸ்ல உச்ச நீதிமன்ற நீதிபதி இன்னிக்கு பைபாஸ்லாம் அப்பெண்டிக்ஸ் மாதிரி ஆகிப் போச்சுனு சொல்லியிருக்காரு பாத்தியானு நம்ம நண்பன் கேட்டாப்ல.
நான் சொன்னேன், ’முக்கியமான கேஸ்னா லா ஸ்டூடன்ட்ஸ், இளம் வழக்கறிஞர்கள்லாம் கேஸ் நடக்கறதப் பார்க்க கோர்ட்டுக்கு போவாங்க. ஆனா இந்த செந்தில்பாலாஜி கேஸை லா ஸ்டூடன்ஸை விட மெடிக்கல் ஸ்டூடன்ஸ்தான் அதிகமா கவனிப்பாங்க போலருக்கு.
அன்னிக்கு அமலாக்கத்துறை சார்புல கோர்ட்ல வாதாடும்போது, ‘எல்லாருக்கும் 40% அடைப்பு இருக்கும்’னு சொன்னாங்க. இன்னிக்கு ஜட்ஜே அப்பெண்டிக்ஸ், பைபாஸ் ரெண்டையும் ஒப்பிட்டுப் பேசுறாரு. செந்தில்பாலாஜி கேஸ் மெடிக்கல் ஸ்டூடன்ஸுக்கும் ஒரு பாடம் தான்யா..னு நான் சொன்னதும்…
‘சட்டமும் மருத்துவமும் சந்திக்கும் புள்ளிதான் செந்தில்பாலாஜி வழக்கு’னு வைரமுத்து வாய்ஸ்ல சொல்லிட்டு சிரிச்சிட்டாப்ல.

நீங்க அப்டேட் பாருங்க

நீங்க அப்டேட் பாருங்க

Writer SJB

முதல் காதல் உடைஞ்சப்போ கூட எனக்கு அவ்வளவு வலி தெரியல தம்பி..

ஆசையா சாப்பிடலாம்னு போட்ட ஆப்பாயில் மஞ்சள் கரு உடைஞ்சு போச்சு தம்பி..!!!

Manjari

திருப்பதியில் 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்- ஜி

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜி எதுவுமே செய்யவில்லை என்று இனிமேல் யாரும் சொல்லக்கூடாது..!!!

ஷேக்பரித்

இப்படியே போச்சுனா வரும் காலங்களில்

தங்களுக்கு தெரியாத சட்டமில்லை ஆகவே கூகிளில் தேடி பார்த்து
அந்த பிரிவின் கீழ் தண்டிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஹானர்..

James Stanly

பாண்டியா வந்துட்டான்.. இப்ப வாங்கடா லேய்..

40 கோடி வச்சிருக்கோம்.. ஈசாலா கப் நம்தே..

ஜோ

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன்ன்னு பல ஹிட் படங்கள் குடுத்து மான்குட்டி மாதிரி துள்ளி திரிஞ்சிகிட்டு இருந்தான் மனுஷன்,

தனி ஈழம் வாங்கலாம்னு ஒருத்தன் பேச்சை கேட்டு பின்னாடி போனதுதான்.. அன்னையோட டைரக்ஷன்ல கோட்டை விட்டதுதான்..

வன்ம கிச்சா

சீரக சம்பால பிரியாணி நல்லாருக்கும்னு எல்லாத்துக்கும் தெரியும் டா

ஆனா இவனுங்க அத நல்லா செய்னமே

பிளடி திண்டுக்கலான்ஸ்

Villainism

இந்திய கிரிக்கெட் டீம் ஜெர்ஸி கலர்ல ஆர்ஞ்சு பார்டரோட ட்ரெஸ் தெச்சுட்டு போயி பல்ப் வாங்குன கோமாளி
இதுக்கு சிமண்ட் கலர்ல புது துணி போட்டுட்டு போய் போஸ் குடுத்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்ல

மயக்குநன்

பசுமை, வெண்மைப் புரட்சி, பெரிய அணைகள், பல கல்வி நிறுவனங்களைக் கொடுத்தது காங்கிரஸ்!- மல்லிகார்ஜுன கார்கே.

‘கோஷ்டி அரசியலை’ விட்டுட்டீங்க ஜீ..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப் 

’அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்கவே முடியாது’: நீதிபதிகள் வேதனை!

‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு! 

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *