update kumaru November 27

இது தான் ஜன் கி பாத் தெரியுமா?: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நேத்து ’மன் கி பாத்’ல பேசுன நம்ம பிரதமர், யாரும் வெளிநாட்டுல திருமணம் நடத்தாதீங்க.. இந்தியாவிலேயே நடத்துங்க அப்படின்னு சொல்லிருந்தாரு..

இத இன்னைக்கு டீக்கடையில் நம்ம டீக்கட அண்ணாச்சிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். அதக் கேட்டு பால் பொங்குனத விட கோபமா பொங்குன அண்ணாச்சி, “அடிக்கடி உயரும் விலைவாசியால இப்போ எல்லாம் திருமணம் நடத்துறதே பெரும் பாடா இருக்கு..

அதுவும் இல்லாம நம்ம பிரதமர் எப்போ என்ன அறிவிப்பார்னு தெரில… திடீர்னு 1000, 500 நோட்டுக்கு தடை போட்டா மாதிரி ஏதாச்சுன்னு வழக்கம்போல அறிவிச்சாட்டாருன்னா நிலமை இன்னும் மோசமாகிடுது.

இப்படி இருக்குற நெலமைல திருமணத்த அமெரிக்காவுல நடத்துனா என்ன? ஆண்டிப்பட்டில நடத்துனா என்ன?”ன்னு ரொம்ப பொங்கிட்டாரு….

’ஆகா, அந்த மன் கி பாத் (மனதின் குரல்) விட இந்த ஜன் கி பாத்(மக்களின் குரல்) பயங்கரமா இருக்கே’னு மனசுல நினச்சுக்கிட்டு குடிச்ச டீக்கு காச குடுத்துட்டு கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ட பாருங்க!

Writer SJB

இந்தியா கூட்டணியை மு க ஸ்டாலின் உடைக்கிறார்- மத்திய இணை அமைச்சர் எல் முருகன்

ஆடு நனையுதேன்னு ஓநாய் எதுக்கு அழுவுது..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

கே டிவி :

அப்புறம் என்னப்பா.. இந்த வீக்எண்டு சூப்பர்ஹிட் இரவுக்காட்சி ‘பருத்தி வீரன்’ படம் போட்டுறலாமா..?

நித்யா

ஊராடா இது… குங்கும பொட்டு வச்சுகிட்டு அல்லா பாட்டு பாடுறதும்.

ஹிஜாப் போட்டுகிட்டு கொலு பாட்டு பாடுறதும். துணைக்கு ஏசுவை கூப்பிடுறதும்.

கடைநிலை ஊழியன்
இந்த youtube காரன் கொஞ்சம் கொஞ்சமா “skip” பட்டன் ‘ன “video plays soon” னு மாத்திட்டு வரான்..
அதுசரி அவனும் ஒரு வியாபாரி தானே…
காசு பணம் துட்டு மணி மணி !!

black cat 2

இந்த மாசம் வேணும்னா “கார்த்தி”கை யா இருக்கலாம்….

ஆனா ஓங்கி இருக்குறது அமிரோட கை.

Manjari

ராஜஸ்தானில் காங்கிரஸின் ஊழல் ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்!- அமித்ஷா.

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றிய மாதிரியா..?!

update kumaru November 27

அந்துவன் அந்துவன்

இயேசு :சினிமா பார்த்தால் பரலோக ராஜ்யத்தில் இடம் இல்லை மகனே.

நான் உன்னையவே சினிமால தான் பார்த்தேன் போவியா…..

update kumaru November 27

மயக்குநன் update kumaru November 27

தற்போதைய இந்தியா பலவீனமாக இல்லை!- ராஜ்நாத் சிங்.

இந்தியாவா… ‘இண்டியா’வா..?!

update kumaru November 27

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

அதிமுக பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி ஆட்சேபனை மனு தாக்கல்!

ஆட்சியர்களுக்கு ED சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பு!

update kumaru November 27

+1
1
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *