டீக்கடையில போண்டாவ எடுத்த நம்ம செவ்வாயன் அத பிச்சி வாயில போட்டுக்கிட்டே, ‘அண்ணே இந்த போண்டாவும், ஹர்திக் பாண்டியாவும் ஒன்னுனே… ஏன் தெரியுமா?”ன்னு கேட்டான்.
எப்பவும் போண்டாவ கையிலெடுத்தா… பொண்டாட்டின்னு தானே ’கடி’ப்பான்… இன்னைக்கு என்ன புதுசா சொல்றானேன்னு மனுசுக்குள்ள குழம்பிட்டு… ’தெரியலேயே’ன்னு சொன்னேன்
அதுக்கு அவன், ”இன்னைக்கு 5.25க்கு ஹர்திக் பாண்டியா தான் எங்க டீம் கேப்டன்னு குஜராத் சொல்லிடுச்சி… 7.25க்கு மும்பை டீம் அவன வாங்கிட்டோம்னும் சொல்லுது… இதுக்கிடையில பாண்டியா பஞ்சாப் டீமுக்கு போவாருன்னு ஒரு கூட்டம் ஜோசியம் சொல்லிட்டு இருக்கு… ஆக மொத்தம் இந்த போண்டா மாதிரி ஒருத்தன போட்டு ஒம்போது பேரு குதறிட்டு இருக்காங்கண்ணே”ன்னு சொல்லி மூச்சுவிட்டான்.
’தம்பி வாங்குன போண்டாவுக்கு குடுக்க மொதல்ல உங்கிட்ட பேட்டா இருக்கா… நமக்கு எதுக்கு இந்த டேட்டா’ன்னு நான் சொல்ல… செவ்வாயன் அங்கிருந்து நைசா செதறிட்டான்…
நீங்க அப்டேட் பாருங்க!
mohanram.ko
news ~ தேஜஸில் பறந்த மோடி
my mind ~ எவ்வளவு கஷ்டம் வந்தாலும், லீவே எடுக்காம வேலை பார்க்கிறது, அந்த போட்டோகிராபர் தான்டா!
butterfly.
என்ன ஆனாலும் பரவாயில்ல,
இன்னைக்கு எடுத்தே ஆகுறோம் மாமா ,
கறியா மாப்ள
மெழுகுவர்த்தி மாமா, சாயங்காலம் வைப்பாங்க, வீட்டுக்காரன் வச்சிட்டு அங்கிட்டு போனதும் ஊதிட்டு எடுத்துடுறோம் ,
அப்போ நீ இன்னும் திருந்தல
#கார்த்திகைதீபம்
மயக்குநன்
தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சியாக தமாகா உள்ளது!- ஜி.கே.வாசன்.
இந்த விஷயம் மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க..!
The badass is coming back for the 2024 season• pic.twitter.com/dovG2YymR7
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 Das (@SergioCSKK) November 26, 2023
ஏக ஏகாயே… 😂😂😂😂 #PanautiMuktBharat pic.twitter.com/ahSqFg0F1n
— Alíén 👽 (@Alien18R) November 25, 2023
கோழியின் கிறுக்கல்!!
பெண்கள் புதுசா இருக்கவங்க கிட்ட பார்த்து பார்த்து பேசுவாங்க,
ஆனா புருஷன் கிட்ட, பக்கத்தில் யார் இருக்காங்கன்னு கூட பார்க்காம, நல்லா “பேசி” விட்டுடுவாங்க!!
சொல்லக்கூடாதாம்
கார்த்திகை நாள் அதுவுமா கவுச்சி எடுக்குறது பத்தி பேசிட்டு இருக்கிங்களே நம்ம இந்து தர்மம் என்னாகுறது…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!
”வெளிநாட்டில் திருமணம் நடத்தாதீங்க”: மன் கி பாத்தில் பிரதமர் வேண்டுகோள்!