Kirachand
இனிமேல் மனுஷனா இருக்கப்போறேன்ணே!
அப்ப இனி தப்பு செய்ய மாட்டியே?
தப்பு செய்வேன்ணே…
என்னடா சொல்ற?
அதான்… தப்பு செய்றவன்தான் மனுஷன்னு திரிஷாவே சொல்லியிருச்சேண்ணே!
#To err is human
balebalu
ஜவுளி கடைகளும் நகை கடைகளும் பெருக பெருக
‘சீரியல் லைட்’ விற்பனையாளர்களின் பாக்கெட் நிறைகிறது
Sridhar Subramaniam
‘என்னது, நீங்க ஜெயிச்ச கப்பு மேல கால் வைப்பீங்களா? என்ன எழவுக் கலாச்சாரம்டா உங்க கலாச்சாரம்?’ …என்று கேட்டது நமது கலாச்சாரத்தின் உயர்வைக் காட்டுகிறது. நமது பண்பாட்டின் மேன்மையை சுட்டுகிறது. அடக்கம் அமரருள் உய்த்தாகும் என்று நினைவூட்டுகிறது.
ஆனால் நமது கலாச்சாரத்தில் ஏதாவது சில விஷயங்கள் அவர்களது முகத்தை சுளிக்க வைக்குமா என்று யோசித்தேன். ஒரு நீண்ட பட்டியல் வந்தது. அதில் சில விஷயங்களை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
நமது கலாச்சாரம் பற்றி விளக்கினால் ஆஸ்திரேலியர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என்ன சொல்வார்கள் என்ற அவர்கள் ரியாக்சனை கீழே கொடுத்திருக்கிறேன்:
– என்னது, உங்க நாட்டில பிள்ளைங்க மூணு பாஷை கத்துக்கணுமா? அப்போதான் அவங்க அறிவாளின்னு ஒத்துக்குவீங்களா?
– என்னது, நீங்க காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப் போடுவீங்களா?
– என்னது, நீங்க கருவை ஸ்கேன் பண்ணி, பொண்ணுன்னு தெரிஞ்சா அதை அழிச்சிருவீங்களா?
– என்னது, உங்க நாட்டில அண்ணன் பொண்டாட்டி உங்களுக்கு அரை பொண்டாட்டியா?
– என்னது, உங்க நாட்டில இன்னமும் பீயை கையால அள்ளுற வேலையைப் பார்க்கிறவங்க இருக்காங்களா?
– என்னது, நீங்க யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்க அம்மா, அப்பா முடிவு பண்ணுவாங்களா?
– என்னது, அந்தப் பெண்ணே முடிவு பண்ணிச்சின்னா அதையும் அந்தப் பையனையும் போட்டுத் தள்ளிருவீங்களா?
– என்னது, போட்டுத் தள்ளின பொண்ணை சாமியாக்கி கும்பிடுவீங்களா?
– என்னது, உங்க நாட்டில அடிக்கிற புருஷன் கிட்டே இருந்து பொண்டாட்டி ஓடி வந்தா, அவளை திரும்ப அவன் கிட்டயே அனுப்பிருவீங்களா?
– என்னது, நீங்க தண்ணி டேங்க்ல பீய கலப்பீங்களா?
– என்னது, டிவோர்ஸ் ஆன பொண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டீங்களா?
– என்னது, உங்களுக்குப் பிடிக்காததை யாராவது சாப்பிட்டா அவங்களை அடிச்சே கொன்னுடுவீங்களா?
– என்னது, உங்க வீட்ல ஆம்பளைங்க எந்த வேலையும் பார்க்க மாட்டாங்களா? பார்த்தா அவங்களுக்கு அவமானமா?
என்ன எழவு கலாச்சாரம்டா உங்க கலாச்சாரம்?
சரவணன். 𝓜
Kirachand
me ~ காதலுக்கு எதிர்ப்பு இருக்கு மாமா?
my mams ~ அம்மா, அப்பாவா மாப்ள?
me ~ காதலி மாமா!…
mams ~ கடுப்பேத்தாமா ஓடிரு!
Mohamed Roshan Rathnam
வருச கடைசி போனஸ் குடுப்பாய்ங்கனு பார்த்தா நம்ம வாயிக்கு நாமளே வாய்க்கரிசி
போட்டுக்குற அளவுக்கு வேலைய குடுக்குறானுங்க
Best Friends ❤️ pic.twitter.com/LsBfaaPVDq
— black cat 2 (@Cat__offi2) November 24, 2023
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? update kumaru November 24
தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம் – த்ரிஷா
அதாவது உங்களுக்கு தெய்வ குணம்..?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து 24 வயது பெண் மருத்துவர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி!
கொம்பன் என்னும் பெண் வம்பன்… என்கவுன்ட்டர் பின்னணி இதுதான்!