பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்ல பிரச்சாரம் பண்ணுங்கப்பான்னா ஆளுக்காளு சேறை வாரி இறைச்சுக்குறாங்க. மோடியை பிக்பாக்கெட்டுனு ராகுல் சொன்னாராம்… ராகுலை முட்டாள்களின் ராஜானு மோடி சொன்னாராம். சரி அப்ப ஓட்டு போடுற மக்களை என்ன சொல்ல வர்றீங்க?

இதெல்லாம் இருக்கட்டும்… உலகக் கோப்பை ஃபைனலுக்கு பீடை ஒண்ணு வந்துச்சு… இந்தியா தோத்துப் போச்சுனு ராகுல்  பேசியிருக்காரு.   உடனே பிஜேபி தேர்தல் ஆணையத்துக்கிட்ட, ‘ராகுல் எங்கள் மோடியைதான் சொல்றாரு’னு புகார் சொல்லியிருக்கு. அதை அடிப்படையா வைச்சு தேர்தல் ஆணையமும் ராகுலுக்கு நோட்டீஸ் விட்டிருக்கு.

இதுல ராகுலை விட மோடியை அதிகமா அவமதிச்சது பிஜேபியும், தேர்தல் ஆணையமும்தானே… வடிவேலுவை சுத்தியிருக்கிறவங்க, ‘அண்ணன் அட்ரசை நோட் பண்ணிக்க’னு சொல்ற மாதிரியில்ல இருக்கு. ஆக வேர்ல்டு கப் ஃபைனல்ல விளையாட்டைத் தவிர வேற எல்லாம் நடக்குது.

நீங்க அப்டேட் பாருங்க…

 

பாக்டீரியா

ரெயின் கோட் வச்சிகிட்டே மழைல நனஞ்சிட்டு ஆபிஸ் வர மொத கிறுக்கன் நானா தான் இருப்பேன்..

Dr.Aravind Raja

முட்டு குடுக்க தெரிலனா உட்ருங்க மேடம்..

𝙍𝙐𝘽𝘼𝙉 𝙃𝘼𝙍𝙄𝙎𝙃

Getting into the bus with 500 rs note for 12 rs ticket!

: தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கிறான்

துருவநட்சத்திர பாய்

சார் இந்தியா டீம் பழி வாங்க வந்திருக்கு..

Aus கேப்டன் : யாரு கேப்டன் ?

சூர்யா குமார் யாதவ் சார்..

black cat 2

சென்னையில எங்க இருக்கிங்கன்னு கேட்டா “வேளஅன்பு”ன்னுட்டு போறாரே

அந்த ஏரியா சென்னையில எங்க இருக்கு?

அட நம்ம வேளச்’சேரி’யைத் தாங்க அவர் அப்படி சொல்றாரு!!

பூதம்

வழக்குல இருந்து தப்பிக்க தூள் படத்துல பார்த்த சீனை யூஸ் பண்ணுது போல. சுந்தர் சி கொடுத்த ஐடியாவாத்தான் இருக்கும்

James Stanly

சைனாவும் கிரிக்கெட் விளையாட தெரிஞ்சி பைனல் வந்திருக்கலாம்..

*ஏன்..

சைனா பேர கேட்டாலே பீடை கிரவுண்டு பக்கம் வந்துருக்காது.. கப்பு நமக்குதான்..

BINDU-ബിന്ദു
கோப படுறதே வந்து சமாதானம் பண்ணுவாங்கன்னு தான்… ஆனா எனக்கு வாய்ச்சதுக்கு நா கோவமா
இருக்கேன்னு கூட தெரியல ..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

லாக் ஆப்

சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்: என்ன ஸ்பெஷல்? 

21 ஆண்டுகளுக்கு பிறகு… ஒரே ஸ்டூடியோவில் கமல் – ரஜினி!… வைரல் வீடியோ!

 

+1
0
+1
11
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0