ஆபிஸ்ல வேலை பாக்குற மதுரைக்கார நண்பரு ரொம்ப வருத்தமா இருந்தாரு. ”இப்போ தான சம்பளம் வந்துச்சு அதுக்குள்ள ”ஏன் இம்புட்டு சோகம்னு?” கேட்டேன். update kumaru January-9-2024
‘மத்திய அரசு மாதிரி, மாநில அரசும் எங்கள வஞ்சிருச்சு”ன்னு மறுபடியும் சோகம்.. அதுக்கு நான் ”ஆமா 6 ஆயிரம் உங்களுக்கு தரல அதானே? என்று கேட்டேன்.
அதுக்கு அவரு, ”அட அது இல்லப்பா, எய்ம்ஸ்னு சொல்லி ஒத்த செங்கலோட மத்திய அரசு எங்கள கைகழுவிருச்சு. இப்போ 26 லட்சம் வேலைவாய்ப்புகள உருவாக்குன மாநில அரசும் எங்கள கண்டுக்கல”ன்னு உண்மையிலேயே பீல் ஆயிட்டாரு.
மிட் நைட் 2 மணிக்கு போனாலூம் சுட சுட இட்லி போடுற தூங்காநகரத்துக்கு இப்படி ஒரு சோதனையா?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
காக்கா
செய்தி: உத்திரபிரதேசம் 33 லட்சம் கோடி ரூபாய் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈட்டியதன் மூலம் , “1 கோடி” வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
~ அப்புறம் ஏன் உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை இல்லாமல் தமிழ்நாட்டுக்கு படையெடுக்குறாங்க?
பாக்டீரியா
கொங்கு மக்கள் : சூடா வெங்காய பஃப்ஸ் ஒண்ணு குடுங் ணோவ்
~ ஏன் வாய்ல சமோசா ன்னு வராதா?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய ஆழ்கடல் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு!
GOAT ரிலீஸ் தேதி இதுதான்… பண்டிகைய கொண்டாடுங்கலே!
update kumaru January-9-2024