கலைஞர் 100 விழாவுல புது சி.எம் : அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru January-6-2024

’நேத்து நடந்த கலைஞர் 100 விழாவுல நடந்த முக்கியமான விஷயத்த கவனிச்சியா?’னு கேட்டான் கோபாலு. ’அட ஆமா.. சொல்லி வச்சா மாதிரியே ரஜினியும் விஜயும் வரல அதானே’னு நா சொன்னேன். update kumaru January-6-2024

’அது இல்லப்பா நம்ம தமிழ்நாட்டு புரூஷ்லீ தனுஷ் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிற போட்டோவ போட்டு ‘CM greets CM’ னு சமூகவலைதளங்கள அவரு ரசிகருங்க பதிவு போட்டிருந்தாங்க.. அத பாத்தியா?”

’இது என்னப்பா புதுசா இருக்கு… ஏற்கெனவே ரஜினி, கமல் எல்லாம் சி.எம் பதவிக்கு ஆசப்பட்டு, பின்ன நமக்கு எதுக்கு அந்த நெனப்புனு விலகிட்டாங்க.. இந்த தனுஷ் இப்போ நல்லா தான்னா நடிச்சிட்டு இருக்காரு… அவருக்கும் அந்த நாற்காலி ஆச வந்துருச்சா?’னு கேட்டேன்.

அதுக்கு கோபாலு, ’நானும் அப்படி தான் முதல்ல நெனச்சி பயந்துட்டேன். அப்புறம் தான் புரிஞ்சது சி.எம். ன்னா கேப்டன் மில்லராம்.’

அட தனுஷூ ரசிகர்களே… இப்படி தினுஷு தினுஷா கெளப்பாதீங்கப்பா… கொஞ்சம் திகிலா இருக்குல!

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

The Cheems

ஆண்களின் வாழ்க்கை என்பது பெண்கள் கையில் கிடைத்த ‘ரவை’ மாதிரி..

அதில் ‘கேசரி’ செய்வதும், ‘உப்புமா’ செய்வதும் அவர்களின் மனநிலையை பொறுத்தது.

 

update kumaru January-6-2024
நாகராஜா சோழன் MA MLA
மாப்ள நானும் விஜயகாந்த் மாதிரி மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண போறேன் டா
~ அண்ணாச்சி கடையில சும்மா ரெண்டு காலண்டர் குடுத்த அதுல ஒன்ன கூட நீ அடுத்தவங்களுக்கு குடுக்க மாட்ட, இதுல ஹெல்ப் பண்ற மூஞ்சியை பாரு…

கடைநிலை ஊழியன் 
நான் கூட எனக்குள்ள ஒளிஞ்சு இருக்குற திறமை என்ன னு கண்டுபிடிக்க தெரியல னு நினைச்சிட்டு இருந்தேன்.. அப்பறம் தான் தெரிஞ்சது, எனக்கு எந்த திறமையும் இல்லனு..
update kumaru January-6-2024
Mannar & company
அடுத்த வாரத்தில் வர்ற மூன்று நாட்கள் லீவுதான்டா
இந்த மாசத்தில் லீவே எடுக்காம வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணுது!
-பொங்கல்_விடுமுறை
update kumaru January-6-2024
Kirachand
பீச்சில் போட்டோ ஷூட் நடத்தும் பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்? – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
வெரி சிம்பிள்… அங்க போட்டோ ஷூட் எடுக்க முடியாதுங்களே!”…
லாக் ஆஃப் 
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share