update kumaru January 3 2024

எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை பொங்கல்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தரு இன்னைக்கு கால் பண்ணியிருந்தாரு. அவர்க்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே, “பொங்கலுக்கு என்ன பிளான்னு” கேட்டேன். update kumaru January 3 2024

“டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சி, ஊருக்கு போய் சிறப்பா பொங்கல கொண்டாட வேண்டியதான்னு” சொன்னாப்ல

“அதுசரி…பொங்கல் பரிசு தொகுப்பு கவர்மெண்ட் அறிவிச்சிருக்காங்களே பாத்தீங்களான்னு” கேட்டேன்.

“இல்லையே அதுபத்தி இன்னும் பார்க்கலன்னு” சொன்னாப்ல

“இந்த வருஷம் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலை கொடுக்குப்போறாங்கலாம்”

“அப்போம் பணம்…”

“அதுபத்தில்லாம் இன்னும் ஏதும் சொல்லலங்க…”

“ஏற்கனவே போன தடவ கொடுத்த வெல்லம் உருகிப்போயிருந்துச்சு…அதுக்கே எதிர்க்கட்சிகள்ளாம் கடுமையா விமர்சிச்சி பேசியிருந்தாங்க…இப்போம் 1000 ரூபா வேற இல்லையா. உண்மையில சொல்லப்போனா இது எதிர்க்கட்சிகளுக்கு தாங்க சர்க்கரை பொங்கல்ன்னு” சொன்னப்ல

“ஆமாமா…இப்போவே அடுத்தடுத்து அறிக்கைல்லாம் வந்துக்கிட்டு இருக்கு…பொங்கல் முடியுறதுக்குள்ள இத வச்சி ஒரு பிரளயமே நடக்கும்ன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Manjari

கடவுளோட விளையாடாதீங்க ப்ரோ, அவர் மன்னிக்க மாட்டார்.”
அட பாவிகளா, ஒரு மீம் மன்னிக்காத கடவுளா உங்க பாவங்கள எல்லாம் மன்னிக்க போறாரு ?

மயக்குநன்

‘இண்டியா’ கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது; எப்போது நெருப்பு வரும் என்று தெரியவில்லை!- எடப்பாடி பழனிசாமி.
‘குளிர் காய’ காத்துகிட்டு இருக்கீங்க போல..?!

🄰🅃🄲 ™
மாஸ்டர் நாளைல இருந்து வரமுடியாது போல இருக்கு .. மூணு நாள் காசு கழிச்சிட்டு பேலன்ஸ் அமௌண்டுக்கு ஒரு தம்புள்ஸ் தர்ரிங்களா?

பாக்டீரியா
~ பூமியை பாயாக சுருட்டினான்…
: எங்க நின்னுகிட்டு சுருட்டினான்…. ?
~ பூமில நின்னுட்டு தான்…
BINDU-ബിന്ദു.
இவ்ளோ நாள் போற போக்குல டிசம்பர்ல தான் வேலைய காட்டும்.
இப்ப என்னவோ ஆரம்பத்திலேயே ஆட ஆரம்பிச்சுருச்சு.
Villanism
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பிறகட்சித் தலைவர்களை பாஜக சொல்படி நடக்கிறார்கள் என்று குறை கூறக்கூடாது!- சசி தரூர்.
குடமுழுக்கு விழாவுக்கு போறதுக்கு டிக்கெட் போட்டாச்சு போல..?!
update kumaru January 3 2024
Black Cat
தேர்தல் போட்டியிலிருந்து எனக்கு ஓய்வு கொடுங்கள்!- கட்சியினருக்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேண்டுகோள்.
தேர்தல்ல போட்டியிடுங்க… ஒட்டுமொத்தமா மக்களே கொடுத்துருவாங்க..!
update kumaru January 3 2024
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
வெந்தால் தான் சோறு… நொந்தால் தான் வாழ்க்கை!!
update kumaru January 3 2024
black cat 2

“நியூ இயர் முடிஞ்சுருச்சு நாளைல இருந்து வாக்கிங் போயிர வேண்டியதுதான்… ச்சே ச்சே வேண்டாம் தமிழ் புத்தாண்டுல இருந்து போய்க்கலாம்.. “

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப் 

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

பிரதமரை சந்திக்க போவது ஏன்? – உதயநிதி பதில்!

update kumaru January 3 2024

+1
2
+1
14
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *