பொங்கல் வந்துடுச்சி ஊருக்கு போகலாமா வேணாமான்னு குழப்பமா இருக்கு…
சரி நண்பர் கிட்ட கேட்டா ஒரு தெளிவு பொறக்குமேன்னு நெனச்சி கேட்டேன். அதுக்கு அவரு… ”கோவாலு ஊருக்கு போலாம்னு முடிவு பண்ணி வந்துட்டேன். ஆனா இப்போ கோயம்பேடு போகவா… கிளாம்பாக்காம் போகவானு தான் ஒரு ஒரே குழப்பமா இருக்கு. இதுக்கு இவங்க பேசாம ஸ்ட்ரைக்கே பண்ணிருக்கலாம். ஊருக்கு வாங்கனு சொன்ன என் வீட்டம்மாட்ட இருந்தாச்சி தப்பிச்சிருப்பேன்’னு உச் கொட்டுறாப்ல.
’அட என் குழப்பத்த விட உன் குழப்பம் பெரிய குழப்பமா இருக்குயா’னு சொல்லிட்டு நைட்டு 2 புரோட்டா சாப்பிட்டு போய் தூங்க வந்துட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க….
balebalu
முழுக்க கட்டி முடிக்காமலேயே ராமர் கோவில் எப்படி அண்ணே கும்பாபிஷேகம் பண்ணுறாங்க
அடேய் இப்போ எய்ம்ஸ் கூடத்தான் கட்டல்ல
ஆனா மாணவர்களுக்கு கிளாஸ் ஆரம்பிச்சு நடத்துறாங்கல்ல அது மாதிரிதான்
ஜோ
எலைட் சங்கீஸ் ~ “Boycott Netflix, Boycott Maldives”
நம்ம ஜீ யை அசிங்கப்படுத்திட்டாங்க, வெகேசன்க்கு யாரும் மாலத்தீவுக்கு போகாதீங்க..
வடக்கன்ஸ் ~ வெகேஷன்க்கு மாலத்தீவா? பொழப்புக்கே அடுத்த ஸ்டேட்ல போயி டேபிள் துடைச்தாதான் 3 வேளை சாப்பிட முடியும்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்துகொள்வேன் ~ ஈபிஎஸ்
புரோ.. நீங்க இப்ப சிறுபான்மை இன காவலர் வேஷத்துல இருக்கீங்க..
அய்யய்யோ அத மறந்துட்டனே ~ ஈபிஎஸ்
என்னதான் விளம்பரமா இருந்தாலும்.. 😅 pic.twitter.com/gUUx44v7Qk
— Mannar & company™🕗 (@Anvar_officia) January 11, 2024
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கம்!
நெட்பிளிக்ஸ்ல இருந்த போது பார்த்தவங்களை விட இனிமே டெலிகிராம்ல இருந்து டவுன்லோடு பண்ணி பார்க்க போறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்க போகுது.
பிரம்மானந்தா
கேப்டன் நற்பெயரை மறைக்க நினைக்கும் திமுகவை கண்டித்து ஜன.20ல் தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் – பிரேமலதா
விஜயகாந்துக்கு அரசு இறுதி மரியாதை செய்தவங்களும், அவரு பேர அழிக்க நினைக்கவரங்களும் ஒண்ணா? புரியலையே தாயீ
மனோகரன்
“50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்” – நிர்மலா சீதாராமன்
அதுல 60 கோடி பேர் மினிமம் பேலன்ஸ் கூட வைக்க முடியாம இருக்காங்க அது உனக்கு தெரியுமா ?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஹோம் லோன் அப்டினு ஒரு ஸ்கேம்ல விழ இருந்து தப்பிச்சுட்டேன் புரோ நானு..
அப்படியா சூப்பர்.. இப்ப என்ன பண்றீங்க புரோ..?
இன்ஸ்டால aanya_forex ன்னு ஒரு ஐடி மூலமா கிரிப்டோ கரன்சி டிரேடிங்ல இன்வஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்