ஆம்னிக்கு அச்சே தீன்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு நைட்ல இருந்து 17 போக்குவரத்து தொழிற்சங்கத்த சேர்ந்தவங்க ஸ்டிரைக்ல இறங்குறாங்க. இது எவ்ளோ நாளைக்கு போகும்னு தெரியல.

இதான் நேரம்னு ஆம்னி பஸ் காரன் டிக்கெட் விலைய ஏத்திட்டானுங்க. நம்ம பிரதமர் பலமுறை நாட்டு மக்களுக்கு அச்சே தீன் வரும் வரும்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பாரு. அதான் நல்ல நாளுங்க…

அது யாருக்கு வருதோ இல்லையோ இப்போ ஆம்னி பஸ் ஓனருக்கெல்லாம் அச்சே தீன் தான். இன்னும் ரெண்டு நாள்ள பொங்கல் லீவுக்காக சென்னையில இருந்து மொத்த கூட்டமும் கெளம்ப போகுது. அதனால இப்போ ஆம்னிக்கு  அச்சே தீன்.. நமக்கு ’அச்சம்’ மட்டும் தான் போல

நீங்க அப்டேட் பாருங்க!

Manjari

டு ஞாயிற்றுக்கிழமை – டேய்.. போன வருஷம் தான் வாரம் வாரம் வேகமா ஓடுன.. இந்த வருஷமாவது கொஞ்சம் மெதுவா ஓட கூடாதா..

சப்பாணி 

காதலில் தோற்றவன் கணவனாகிறான். தேர்தலில் தோற்றவன் கவர்னராகிறான்!

Kirachand

தமிழ்நாட்டில் முதலீடுகள் வர பிரதமர் மோடியே காரணம்! – தெலங்கானா ஆளுநர் தமிழிசை
அப்ப… இந்தியாவில் முதலீடுகள் வர முதல்வர் ஸ்டாலின்தான் காரணம்னு சொல்லுங்க!

வசந்த்

சாம்பாருக்கு “கடுகும்” சென்னைக்கு “படகும்” அவசியமான ஒன்று!

ℳsd இதயவன்
‘தமிழ்நாட்டில் முதலீடுகள் வர பிரதமர் மோடியே காரணம் ~ தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
அது சரி பாஜகவுல எப்ப ஆளுநர் பிரிவு தொடங்குனீங்க?!

amudu
இளமைக் காலம் அதிக கனவு காட்சிகளால் ஆனது. முதுமைக் காலம் அதிக பிளாஷ் பேக் காட்சிகளால் ஆனது.

செங்காந்தள்
ஆட்சி மாறும் போது சட்டைப் பையில் வெளியே தெரியும்படி வைக்கும் பணமும், படமும் மாறி விடுகிறது…!!!
Villanism
செய்தி: ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று குழந்தை பிறக்க வேண்டும். உத்தர பிரதேச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக குவியும் விண்ணப்பங்கள்.
~ இன்னும் 2000 வருஷத்துக்கு பிஜேபி தான் ஜெய் ஸ்ரீராம்!
தர்மஅடி தர்மலிங்கம்
எடப்பாடி குறித்த அந்த ரகசியம்; தெரியப்படுத்த வேண்டியவரிடம் தெரிவிப்பேன்..!’ – ஓ.பி.எஸ்
ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவிச்ச மாதிரிங்களா..?!
கோழியின் கிறுக்கல்!!
சில சமயங்களில் கார் ஓட்டும் போது நாம் காலில் ப்ரேக் போடுவதற்கு முன்பே,
அருகில் அமர்ந்திருப்பவர் வாயில் ப்ரேக் போட ஆரம்பித்து விடுவர்!!
லாக் ஆஃப் 
+1
2
+1
8
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *