update kumaru January-05-2024

தங்கம் தென்னரசு டிக் ஷனரி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

பொங்கலுக்கு ஆயிரம் ரூபா பரிசு அறிவிச்சிருக்காங்க. ஆனா அது எங்க வீட்டுக்கு கிடையாது அப்படின்னு டீக்கடையில ஆதங்கமா சொல்லிக்கிட்டு இருந்தாரு ஒரு தம்பி.

ஏம்ப்பானு கேட்டேன். ‘அப்பா 29 பைசா அரசு ஊழியர். அம்மா ஒரு ரூபா அரசு ஊழியர். அப்புறம் எப்படி ஆயிரம் ரூபா கிடைக்கும்?’னு சிரிக்காம சொன்னாப்ல அந்த தம்பி.

தங்கம் தென்னரசு டிக்ஷனரிய வச்சு தான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுக்கணும்.

நீங்க அப்டேட் பாருங்க….

மெக்கானிக் மாணிக்கம்
140 கோடி மக்களின் நன்மைக்கு லட்சத்தீவில் உக்காந்து சிந்தித்தேன்…
ஏனுங்க வீட்டு மொட்டை மாடில உக்காந்தே சிந்திக்கலாம்ல எதுக்கு அங்க போனீங்க….

mohanram.ko
நம்ம குடும்பத்தை எப்படி முன்னேற்றலாம்னு சிந்திக்க லட்ச தீவுக்கு போறானாம்…
பணம் கேட்கறான்டி உன் பையன்.

Kirachand
வளர்ச்சி திட்டங்களை வழங்க லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி சுவாச கருவி உதவியுடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார்…!!!
பத்து வருஷமா பாஜக ஆட்சியில் மூழ்கி..மூச்சு முட்டி தவிக்கிற மக்களுக்கு… கஷ்டத்திலிருந்து வெளியே வர ஏதாவது பயிற்சி இருந்தா சொல்லுங்கய்யா…

update kumaru January-05-2024

Manjari

பூங்கொத்து வேண்டாம்; கருத்தாழமிக்க புத்தகங்களை கொடுங்கள் – எடப்பாடி பழனிசாமி

~எப்படியும் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம்னு தான் சொல்லப்போறீங்க…

update kumaru January-05-2024

 

மயக்குநன்
2026-ல் தேமுதிக ஆட்சியைப் பிடிப்பது உறுதி!- பிரேமலதா.
ஆட்சியைப் பிடிக்கிறது என்னவோ தேமுதிக பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்கிறது மாதிரி ஈசினு நெனச்சிட்டாங்க போல..?!
update kumaru January-05-2024

Mannar & company™

காலையிலேயே குழந்தைகளை மனைவி எழுப்பும்போது  விழுற திட்டுகளெல்லாம் குழந்தைகளுக்குதான்னு நினைக்கிற கணவனே சாணக்கியன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?

வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?

+1
1
+1
14
+1
0
+1
5
+1
1
+1
2
+1
3

1 thought on “தங்கம் தென்னரசு டிக் ஷனரி: அப்டேட் குமாரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *