திருப்பு முனையா கேக்குறே திருப்பு முனை… அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru January-04-2024

திருச்சிக் கார ஃப்ரண்ட் போன் பண்ணாப்புல… என்னாய்யா உங்க ஊரு ரொம்ப மாறிக்கிட்டிருக்காமேனு கேட்டேன். update kumaru January-04-2024

அதுக்கு அவரு, ‘ஆமாய்யா… திருச்சிக்கு வந்தே பாரத் இரயில் வந்ததுக்கு ஒரு ஐநூறு, புது விமான நிலைய முனையம் திறக்கப்பட்டதற்கு ஒரு ஐநூறு, பஞ்சப்பூரில் புது பஸ் ஸ்டாண்ட் வரப் போவதற்கு ஒரு ஐநூறு, ஆக மொத்தம் ஆயிரத்து ஐநூறு அடுத்த மாதத்திலிருந்து வாடகை ஏத்தியாச்சு!. போனு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டாருப்பா.

திருச்சிக்கு வந்தா வெளியூருகாரங்களுக்குதான் திருப்பு முனை. இங்கயே இருந்தா திருப்புளி முனைதான்யா’னு சொன்னாரு.

அடப் பாவமேனு ஒரு சேட் எமோஜியை வாட்ஸப்ல அனுப்பிவிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

May be an image of 2 people and text

ச ப் பா ணி
பலன் இருக்கு கடமையைச் செய்
#அலுவலக மொழிகள்

 

கோழியின் கிறுக்கல் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share