அடுத்த வருஷம் போகலாம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

அலுவலகம் வருகிற வழியில ஸ்கூல் பசங்க சிலர் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தத பார்த்தேன்.

அப்போம் ஒரு பையன், “இந்த வாரம் மட்டும் மழை வந்தா…அரையாண்டு எக்ஸாம தள்ளி வச்சிருவாங்க…அப்புறம் லீவு…ஸ்ட்ரெய்ட்டா 2024 ஸ்கூல் போயிரலாம்டானு”, அவன் ஃபிரெண்டு கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்.

அவனும், “ஆமாடா…கண்டிப்பா மழை வரனும்னு” சொன்னான்.

இந்த புயல், வெள்ளத்துலயும் ஜாலியா இருக்குறது நீங்க தாண்டானு நினைச்சிக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

THUG 1

அடுத்த மாசம் வந்து புது கார் வாங்கிருக்கேன் புது பைக் வாங்கிருக்கேன்னு
போஸ்ட் போட்ற ஆளுகள எல்லாம் நோட் பண்ணி வைக்கணும்

Kirachand

மிக்ஜாம் புயல் முடிந்து, கனமழை ஓய்ந்தாலும், அரசைக் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தூவானமாய் தூறிக் கொண்டிருக்கின்றன.

black cat 2

15 கிலோ பஞ்சு மூட்டய தூக்குற இந்த கேசவ விநாயகத்துக்கு…
உன் தலைவர் பதவிய தூக்குறதுக்கு 5 நிமிசம் ஆகாது கண்ணா!

Manjari

50 ரூபா குடுத்து பன்னு வாங்கி திங்கிறது இந்த லாரன்ஸ்க்கு பெரிய விஷயமே இல்ல மேடம்
ஆனா பர்ஸ் வீட்டுக்குள்ள இருக்கு வீடு தண்ணிக்குள்ள இருக்கு புரிஞ்சுக்கோங்க!

Writer SJB

குண்டு வச்ச பிரக்யாசிங் எம் பி யா நீடிக்கலாம் மோடியை கேள்வி கேட்ட மஹூவா மொய்த்ரா
எம்பி யா தொடரக்கூடாது நல்லா இருக்குடா உங்க சட்டம்

வன்ம கிச்சா

தமிழ்நாட்டோட தலைநகரமா எத வேணா வச்சிக்கோங்க ஆனா தமிழ்நாட்டோட பேர மதுரை மட்டும் மாத்திடுங்க…

Villainism

பாஸ் தென்னைமர தொடப்பக்கட்டை சிங்கப்பூர்ல சீப்பா கிடைக்குதாம் வாட்சப்ல ரிக்வஸ்ட் வந்தது,
ஒரு 3.5 லட்சம் ரெடி பண்ணிங்கன்னா ஏழை மக்களுக்கு நானே போய் வாங்கிட்டு வந்து குடுத்திருவேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-லாக் ஆஃப் 

டிஜிட்டல் திண்ணை: ஏரியாக்குள்ளயே போக முடியல- ஸ்டாலினிடம் கொட்டித் தீர்த்த எம்.எல்.ஏ.க்கள்- 6000 அறிவிப்புப் பின்னணி!

‘இவள எல்லாம் யாரு கட்டிப்பா’ விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா!

 

+1
2
+1
15
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *