சென்னை என்னும் பொண்டாட்டி: அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

ஆமாமா… நான் வேளச்சேரியிலேர்ந்துதான் பேசுறேன். நேரா கோயம்பேடுக்குதான் போறேன். அங்கேர்ந்து ஊருக்கு போயிடுவேன். இனிமே சென்னை பக்கமே வரமாட்டேன்…’னு ஆவேசமா என் ஃபிரண்டு போன்ல பேசுனாப்ல.
வெள்ளத்துல நீந்தி வந்த அவரை அழைக்கிட்டு போயி ஆசுவாசப்படுத்தி சாப்பிட வச்சேன். ‘என்னய்யா…திடீர்னு சென்னையை விட்டு போறே’னு கேட்டேன்.
ஐயய்யோ… இனிமே ஒரு நிமிசம் கூட இங்க இருக்க மாட்டேன்… வேலை, சம்பளம் எதுவும் வேணாம். நான் ஊருக்கு போறேன்னு மறுபடியும் ஆரம்பிச்சுட்டாப்ல….
சரினு விட்டுட்டு இன்னிக்கு மறுபடியும் அதே நண்பருக்கு போன் பண்ணேன். ‘ஆமாமா… வேளச்சேரியிலேர்ந்துதான் பேசுறேன்’னு இழுத்தாப்ல.
சென்னை உன்னை மாதிரி லட்சக்கணக்கான பேருக்கு பொண்டாட்டிடா. விட்டுட்டு ஓடிடலாம்னு தோணும். ஆனா முடியாதுடா…னு கன்னாபின்னானு திட்டிட்டு வந்துட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

 

Sonia Vimal

இந்த Time ல சென்னைல அபார்ட்மெண்ட் / வில்லா விசிட் புக் பண்ணா

தண்ணி தேங்காத ஏரியாவ கண்டுபுடிச்சு வீடு வாங்கிக்கலாம்

Writer SJB

மழை தண்ணிய திட்டாத மச்சான்
அது வழக்கமா எப்பவும் இங்கதான் நிக்குது
நாம தான் அது நிக்கிற இடத்துல வீடு கட்டிருக்கோம்

mohanram.ko

ஏன்ணே அவனை அடிக்கறீங்க

மழைத்தண்ணியை ஜேசிபிய வச்சி எப்போ தள்ளுவாங்கன்னு கேட்கறான்

மயக்குநன்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘கொக்கு’ போல காத்திருந்து, பாஜக ஆட்சியைப் பிடிக்கும்!- அண்ணாமலை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் ஒண்ணும் ‘மக்கு’ இல்லையே..!
 
கோவிந்தராஜ்
இன்னும் ஒரு நாலு வருசம் தோழியோட சிறப்பா வாழ்ந்திருக்க வேண்டியவங்க தான், என்ன பன்றது பாவம் புன்னியவதி போய் சேர்ந்துட்டாங்க…
லாக் ஆஃப் 
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.