முக்கியமான மெசேஜ் மிஸ் ஆகிடுச்சே: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

 

புயலும் மழையுமா இருக்குற நேரத்துல தொண்டைக்கு இதமா இஞ்சி டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போம் நம்ம தம்பி ஒருத்தர் பக்கத்துல வந்து, “அண்ணே உங்களுக்கு மெசேஜ் வந்துருக்கா?”ன்னு கேட்டாப்ல…”என்ன மெசேஜ்யா?”னு திருப்பி கேட்டேன்.

மிக்ஜாம் புயல் காத்து கனமழைனு இருக்குறதால, பொதுமக்கள் தேவையில்லாம வெளியே வர வேணாம். அப்டினு எனக்கு மெசேஜ் வந்துருக்குணே ஆனா பாருங்க இதுல முக்கியமான மெசேஜை சொல்ல விட்டுட்டாங்க அப்டினு தலையில அடிச்சிக்கிட்டாப்ள…இதான்யா முக்கியமான மெசேஜூ இதவிட முக்கியமானது வேற என்னானு நான் கேட்டேன்.

அதுக்கு அந்த தம்பி, அண்ணே நாளைக்கு டாஸ்மாக் லீவுங்குறதே இந்த மெசேஜ்ல இல்ல, நான் இப்பதான் கடைய கிராஸ் பண்ணி வந்தேன். ஒரு முன்னெச்செரிக்கை குடுத்திருந்தா வரும்போதே வாங்கிட்டு வந்திருப்பேன். இப்போம் மறுபடியும் மழையில நனைஞ்சிக்கிட்டு போகனும்னு அசால்ட்டா சொன்னாப்ள.

தம்பி மிக்ஜாம் புயலை விட மோசமான ஆளு நீதாண்டானு சொல்லிட்டு, நான் கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க.

Don ராசப்பா

ராமர் கோயிலே இன்னும் திறக்கல,
அதெல்லாம் திறந்தா என்ன ஆவுறது

நினைச்சாலே பகீர்ன்னு இருக்கு

Writer SJB

ஏன்டா குட்கா வாயனுங்களா
உங்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் ஏற்படுத்தாமல் வறுமையில் வாழ வைக்கும்
பாஜகவுக்கு ஓட்டு போடுறீங்களே எப்படிடா பிழைப்பீங்க..?

அதுக்குத்தான் நாங்க வேலை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்துடுறோம் அண்ணா..!

மெக்கானிக் மாணிக்கம்..

தமிழ்நாடு கர்நாடகாவை தொடந்து தெலுங்கானாவிலும் வெற்றிகரமான தோல்வியை சந்தித்த ஆட்டுக்குட்டி

 

விமலிசம்

எல்லாத்துக்குமே தயாராதான் இருக்கோம் மாமா..
2024 மறுபடியும் மோடிக்கா?
இல்ல மாமா 2026 எடப்பாடிக்கு

black cat 2

வந்தாரை வாழ வைக்கும் சென்னை…

டிசம்பர் வந்தால் நீந்த வைக்கும் உன்னை

 

Kolaaru Kumaaru

சரி சரி இப்ப பிஜேபி ஆட்சியில மட்டும் அப்படி என்ன பெரிய குறை இருக்கு.
அப்படியே அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்க வேண்டியது தான

Lawrence Label.
பவன் கல்யாண பாத்து விஜய் திருந்துவாரானு பேசிட்டிருக்கானுங்க, நம்மாளுக்கு இப்ப அங்கெல்லாம் எலக்சன் நடந்துனுருக்குமானு தெரியுமானே தெரில
https://twitter.com/JamesStanly/status/1731190431256588514
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சென்னை மழையையும் ஞானவேல்ராஜாவையும் டிஸ்சார்ஜ் பண்ணு,
நாலு மாநில தேர்தல் முடிவுகளை அட்மிட் பண்ணு..
https://twitter.com/JamesStanly/status/1731177828786598369
balebalu
4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ~ செய்தி
ஏற்கனவே மழையால் ஊரே தள்ளாடும்போது இவங்களும் தள்ளாடனுமா ன்னு நினைச்சுட்டாங்களோ
+1
0
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *