update kumaru December 27 2023

திகாரா? இல்ல தி.நகரா?: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

மாமியார், மருமக சண்ட கூட ஓஞ்சிரும் போல… ஆனா இந்த அதிமுக தலைமை சண்ட மட்டும் இன்னும் ஓயவே மாட்டேங்குது. update kumaru December 27 2023

‘அந்த இரகசியத்த’ சொன்னா திகார் ஜெயிலு கன்பார்ம்னு மாத்தி, மாத்தி எடப்பாடியும், பன்னீரும் சொல்லிக்கிறாங்க. ஆனா அந்த ரகசியம் என்னனு மட்டும் கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேங்குறாங்க…

இப்படி திகார் திகார்னு ரெண்டு பேரும் திகில் காட்டுறதுக்கு பதிலா, இனி மழ பெஞ்சா கொஞ்சம் தி.நகர் பக்கம் போயி மக்களுக்காக குரல் கொடுங்க உங்களுக்கு ஓட்டாச்சும் வரும்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Karal

ஊரே அழிஞ்சிடும்னு எல்லோரும் ஓடிட்டு இருக்கும்போது ஒருத்தி மட்டும் கிறுக்கி மாதிரி என் பெருமாள் பத்திரம் என் பெருமாள் க்கு ஒண்ணும் ஆகாகூடதுனு சொல்லுவா… என்ன லூசுதனமான character design இது, இப்டியல்லாம் யார இருபாங்களானு அன்னைக்கு KS ravikumar ah திட்டினேன். Sry sir, U r genius.!
ஜோ 
தொட்டது எல்லாத்துக்கும் வரி போட தெரிஞ்ச எனக்கு, உண்டியல்ல காசு போடுறவங்களுக்கு தனியா வரி போட ஒருநிமிஷம் ஆகாது கண்ணா..!!
எழுத்தாளர் ராஜேஷ் குமார் 

**சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சிகளைப்
பார்த்து பயப்படுவர்களுக்கான
பரிகாரம் இது**
………………………

செய்யும் தொழிலில்
நேர்மை.
பேசும் வார்த்தைகளில்
உண்மை.
நினைக்கிற எண்ணங்களில்
தூய்மை.

குடும்ப உறுப்பினர்களோடும்,
சொந்த பந்தங்களோடும், பழகும் போது, , நிதானத்தை
கடைபிடித்து, தேவையற்ற
பேச்சுக்களை,
தவிர்க்கும் பொறுமை.

ஆடம்பர செலவுகளைச்
தவிர்த்து,
கடன் வாங்காமல்,
கையில் இருக்கும் பணத்தைக்
கொண்டு, வாழப்
பழகிக் கொள்ளும்
தன்மை.

இவைகளையெல்லாம்
கடைபிடித்தால்
சனியும்,
குருவும்
நமக்கு நன்மை செய்யும் நெருங்கிய
நண்பர்கள்.

Manjari

வெள்ளத்தில பாதிச்சு நடுத்தெருவுல நிக்குற மக்களை விடு,
பெருமாள் வர்ற பாதை எவ்ளோ டேமேஜ் ஆயிருக்கு தெரியுமா?
Mannar & Company
அடுத்த வாரத்தில் வர்ற மூன்று நாட்கள் லீவுதான்டா
இந்த மாசத்தில் லீவே எடுக்காம வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணுது!
கோழியின் கிறுக்கல் 
பள்ளியில் சேர்க்கும் போது, என்ன இவ்வளவு Fees வாங்குறாங்கன்னு தோனும், ஆனா Leave விட்டு பசங்க வீட்ல இருக்கப்ப இன்னும் அஞ்சு பத்து சேர்த்து’ வாங்கிட்டு Schoolலயே வச்சிக்கலாம்னு தோனும்!!
கடைநிலை ஊழியன் 
லிட்டில் பிரின்சஸ் – இந்தாங்க டிபன் சாப்பிடுங்க.. புது டிபன் ஒன்னு பண்ணிருக்கேன்..
என்ன டிபன்.. வித்தியாசமா இருக்கே..
பிளம் கேக் உப்புமா.. மிச்சம் இருந்த கேக் எல்லாம் உதுத்திவிட்டு தேவயானி மாதிரி கேக் உப்புமா பண்ணிருக்கேன்..
வானம்பாடி
 என்கிட்ட ஒரு Special talent இருக்கு ….
+1
0
+1
11
+1
1
+1
4
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *