பூவோ, புஷ்பமோ, பேரிடரோ…! அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru December 26 2023

நாலஞ்சி நாளா பேரிடர் பாலிடிக்ஸ்தான் தமிழ்நாட்ல ஓடிக்கிட்டிருக்கு. தேசிய பேரிடர்னு மாநில அரசுல சொல்றாங்க… அப்படி அறிவிக்க இடமில்லைனு நிர்மலா சீதாராமன் சொல்றாங்க. டெல்லியில சொன்னவங்க தூத்துக்குடிக்கு வந்து மக்கள்கிட்டயும் அதை எடுத்துச் சொல்லியிருக்காங்க.
தேசிய பேரிடரோ ஆசிய பேரிடரோ பேரை என்ன வேணும்னாலும் வச்சிக்கங்க. எங்களுக்கு நிதியை கொடுங்கனுதான் மக்கள் கேட்குறோம். பூவுனும் சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லலாம். நாங்க அஞ்சு முழம் கேட்டா, மூணு முழமாவது கொடுங்களேன். கொடுத்துட்டு இன்னும் நீட்டி முழக்கி பேசுங்களேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

 

தண்டச்சோறு

கேக்குக்கு ஏன் கேக்னு பெயர் வந்துச்சுனு தெரியுமா தோழி!
தெரியாதே!
எல்லாரும் கேக்குறதுனாலத்தான் அதுக்கு கேக்குனு பெயர் வந்துச்சு!

சப்பாணி 
நல்லவராய் இருந்தால் ஆபிஸில் எல்லா வேலையும் பாக்கனும், ரொம்ப நல்லவராய் இருந்தால் வேற ஆபிஸே பாக்கணும்

Little Princess

நர்சுயா நானு.. நானே டியூட்டி முடுஞ்சு கடுப்புல போய்ட்டு இருக்கேன். என்கிட்ட வந்து கேக்கு கேட்டுட்டு இருக்க..

படித்ததில் சுட்டது….

சரவணன். ????

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை! – எடப்பாடி பழனிசாமி
அதெல்லாம் முடியாது.. உங்க கட்சியோட முன்னாள் அமைச்சர்கள் வீட்ல ரெய்டு வந்தா தான் நம்புவோம்..

ஆப்பிள்காரன் 

ரம்ஜானுக்கு பிரியாணி கேட்டு டார்ச்சர் பண்ணதும், கிறிஸ்துமஸ்க்கு போன் ஸ்விட்ச் ஆப் பண்ணதும் ஒரே ஆளா?
G.O.A.T
 – பேட்டிங்ல டவுட்டு இருந்தா எண்ட கேளுங்க
~ நீயே அஞ்சு ஓவர்ல வெளிய வரப் போற உண்ட கேட்கவா..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel