பண்டிகையை கொண்டாடுங்கலே: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நாளைக்கு கிறிஸ்துமஸ் இதுவரைக்கும் யாருமே எனக்கு ஒரு துண்டு கேக் கூட குடுக்கலன்னு புலம்பிட்டு இருந்த ஆபீஸ் நண்பரை சமாதானப்படுத்த, பக்கத்துல இருந்த அண்ணாச்சி கடைக்கு கூட்டி போனேன்.

அவ்வளவு சோகத்துலயும் கரெக்டா நாலஞ்சு பஜ்ஜிகள வேகமா வாயில பிச்சிப் போட்டு, நண்பர் அவரோட சோகத்த வேகமா ஆத்திட்டு இருந்தாரு.

அப்போ பக்கத்துல நின்னுட்டு இருந்த ரெண்டு பேருல ஒருத்தரு, ”ஆளுநர் ரவி நாகூர் சந்தனக்கூட்டுக்கு போய்ட்டு வந்துருக்காருப்பா. தமிழ்நாடு எல்லாரையுமே மாத்திருது போல,” அப்படின்னு ஆச்சரியப்பட்டாரு.

அதுக்கு கூட இருந்தவரு, ”தமிழ்நாடு எப்பவுமே அப்படித்தான்பா. நேத்து வைகுண்ட ஏகாதசி. இன்னைக்கு  தர்காவுல சந்தனக்கூடு. நாளைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை.

எல்லாத்தையுமே ஒத்துமையா கொண்டாடுறதுனால தான் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டா தமிழ்நாடு இருக்குன்னு,” எடுத்து சொன்னாரு.

டீக்கடையில இப்படி ஒரு அழகான விளக்கமான்னு நெனைச்சுக்கிட்டே ஆபீஸ் கெளம்பினோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ஜோ

இனிமே எதுக்கு தேர்தல் நடத்திக்கிட்டு?!
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி ன்னு நேரடியாவே நடைமுறைப்படுத்திற வேண்டியதானே??!

 

Yaar Paatha Vela Da Ithu
Ambani : தம்பி மனசுல ஏதும் வச்சுக்காம Captaincy பண்ணுவிங்கல்ல
Rohit : பண்ணலாம் தான்… ஆனா எனக்கு Rest எடுக்கணும்ன்னு தோணுதே…!!

Dr.Aravind Raja

தேசிய பேரிடர் ஆணையம் என்ற ஒன்றே தற்போது கிடையாது. – நிர்மலா சீதாராமன்

~ அதையும் அதானிகிட்ட வித்துட்டீங்கலா

 

ஜோ

உதய்ணா ~ உங்கப்பன் வீட்டு காசையா கேக்குறோம்??
சங்கீ ~ ஸாரி..?! ~
மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய உங்க அப்பா காசையா கேட்கிறோம்?
சங்கீ ~ மச் பெட்டர்..
Manjari

800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஊழியருக்கு ரூபாய் 5000 சன்மானம்.

5000₹ யா.. பாத்து செலவு பண்ணு..

 

Writer SJB

சூர்யா நடிச்ச படம் வாரணம் ஆயிரம்..
90ஸ் கிட்ஸ் சிங்கிளா இருக்குறதுக்கு காரணம் ஆயிரம்..!!!
𝕷𝖎𝖙𝖙𝖑𝖊 𝖕𝖗𝖎𝖓𝖈𝖊𝖘𝖘
மாசம் 65 ஆயிரம் சம்பாதிக்கறேன்
அது இருக்கட்டும் பால் பாத்திரம் கழுவ தெரியுமா?
மயக்குநன் 
காய்ச்சல் பரவும் விவகாரத்தில் தமிழக அரசிடம் ‘வெளிப்படைத் தன்மை’ இல்லை!- முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கர். 
அப்ப… அதிமுக ஆட்சியில் இருந்த மாதிரி… இன்னமும் ‘மர்மக் காய்ச்சலாவே’ இருக்குனு சொல்லுங்க..!
Villanism
திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல!- கே.எஸ்.அழகிரி. 
அதான் பல மாநிலங்களில் மக்கள் காங்கிரஸுக்கு கதவைச் சாத்திட்டாங்களோ வாத்தியாரே..?!
லாக் ஆஃப் 
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *