மதச் சார்பற்ற ஆம்னி முன்னணி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

கிறிஸ்துமஸ் லீவுக்கு ஊருக்கு போயிட்டிருந்த நண்பர் போன் பண்ணாரு… ‘என்னய்யா பஸ்ல சீட் கெடைச்சிருச்சா?’னு கேட்டேன். ‘அட… ஏன்யா…ஏற்கனவே எங்க ஊரு வெள்ளக் காடாகி இப்பதான் மூச்சு விட்டுக்கிட்டிருக்கு.

ஊருக்கு கொஞ்சம் பணம் எடுத்துட்டு போலாம்னு பாத்தா, இவனுங்க டிக்கெட்டே ஆயிரத்து 500 போட்டிருக்கானுவோ. தீபாவளிக்கும் இப்படிதான் பண்ணானுவோ’னு புலம்பினாரு.

’சரி விடுய்யா… இவங்களாவது மத பேதம் பாக்காம எல்லா மதத்தையும் ஒண்ணா பாக்குறாங்களே… அத நெனைச்சு சந்தோசப்பட்டுக்கிட்டே ஊர் போய் சேரு’னு சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரத்துல மதச்சார்பற்ற ஆம்னி முன்னணி நிர்வாகிகள் அதாங்க ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துலேர்ந்து கட்டண நிர்ணயம்னு ஓர் அறிக்கை வரும் பாருங்க. அதுதான் ஜோக்கு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
மழைப்பாதிப்பை பார்வையிட ஆசை இருந்தாலும் பிரதமர் மோடிக்கு பணிச்சூழல் உள்ளது! – அண்ணாமலை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் பணியை சொல்றாரோ?

 

WRITER SJB

நீதிபதி தீர்ப்பு சொல்லி இங்கே புதைச்சு வச்ச என் வழக்கை காணோம் சார்..? யோவ் புது நீதிபதி வந்து அதை தோண்டி எடுத்துட்டு போயிட்டார்யா..!
ஜோ
கப்புக்கு மரியாதை குடுக்கணும், பதக்கத்தை வணங்கணும்னுலாம் உலகத்துக்கே கிளாஸ் எடுப்பானுங்க, ஆனா பதக்கம் வாங்குன ஆளை மதிக்க மாட்டானுங்க..
TIMON
காலைல வாங்குர பால் பாக்கெட்ல இருந்து நைட் தூங்குரதுக்கு வாங்குர கொசு பத்தி வரைக்கும் எல்லாத்தையும் வரி கட்டி தான் வாங்குரோம் நம்ம காச கேக்க நமக்கு உரிமை இருக்கு.
Black Cat 2
10 வருஷம் கேப்டனா இருந்த என்னை தூக்கிட்டு அவன் வரணும்னு நினைச்சான் ல சார்..1 வருசம் வெளிய இருக்கட்டும் சார்
ராஸ்கல்
RCB கூட கப் ஜெயிச்சுர்ரும் ஆனா தமிழ் தலைவாஸ் நீ இந்த ஜென்மத்துல கப் ஜெயிக்க மாட்ட

பாக்டீரியா

~ அடிக்கிற வெயிலுக்கு டீ குடிக்கிற… டீ லவ்வரா மச்சி…

டேய் இருக்குற பத்து ரூவாய்க்கு டீ தாண்டா குடிக்க முடியும்….

PraKa
~நானே லீவு கிடைக்கல ஊருக்கு போக முடியலையேனு வருத்தத்துல இருக்கேன். கிறிஸ்துமஸ் கேக் எப்ப வாங்கி தருவனு நைட் 2 மணிக்கு DM ல வந்து கேக்குறான்.
Manjari
~ வாழ்க்கை மிக அழகானது.. : என்ன திடீர்னு..!? ~ Google Payல 100 ரூவா வந்திருக்கு, அதான்..
கடைநிலை ஊழியன்
my mind – ஒரு அஞ்சு நாள் லீவு போட்டு, bike ‘ல அப்படியே long drive ‘ல கோவா போயிட்டு.. அங்க இருந்து..
bank balance – தம்பி.. தம்பி.. imagination எல்லாம் ஓகே.. என்ன கொஞ்சம் நினைச்சு பாரு..
லாக் ஆஃப் 
+1
1
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *