’ஐபிஎல் பிளேயர்ஸ ஏலத்துல அடிக்கிற மணியும், கல்யாணத்துல தாலி கட்றதும் ஒன்னு தான் தெரியுமா?’னு வேகமா வந்து பக்கத்துல உட்கார்ந்த நம்ம சண்முகம் எங்கிட்ட கேட்டான்…
எதுவும் புரியாமா, ’ஏம்பா அப்டி’னு அவங்கிட்டயே திருப்பி கேட்டேன். ”நேத்து நடந்த ஏலத்துல பஞ்சாப் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா 19 வயசு ப்ளேயர எடுக்குறதுக்கு பதிலா.. 32 வயசு பிளேயர எடுத்துட்டாங்க.
இது தெரிஞ்ச உடனே ஏலம் கேட்டவருக்கிட்டே போயி ’ரெண்டு பேருக்கும் ஒரே பேர்னாலே குழம்பிட்டோம்.. எங்களுக்கு 32 வயசு வேண்டாம்… திருப்பி ஏலம் கேட்குறீங்களா?’னு பரிதாபமா பஞ்சாப் டீம் கேட்டுருக்கு
அதுக்கு அந்த ஏலம் விட்டவரு… ’இந்த பாருங்க… 3 தடவ மணி அடிச்சாச்சி… இனி அவ்ளோ தான்… கிடைச்சத வச்சி விளையாடுங்க’னு சொல்லி அனுப்பிட்டாங்க போல…
அதனால தான் சொல்றேன் ’ஐபிஎல் ஏலத்துல அடிக்கிற மணியும்… கல்யாணத்துல தாலி கட்டுறதும் ஒன்னு”…னு சொல்லி முடிச்சிட்டு பெருமூச்சு விட்டான்.
நல்ல பாயிண்டு தான்.. ஆனா சண்முகத்த அவன் வீட்டுக்காரம்மா காலைலேயே செமத்தியா திட்டிருக்கு போல…. அதான் இப்படி பொங்குறான்னு புரிஞ்சிக்கிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
UPT – 77
அனிதா ராதாகிருஷ்ணன் மக்களை மீட்க போயிருந்தாரா…?
~இல்லங்க… அனிதா ராதாகிருஷ்ணனை தான் மக்கள் மீட்க போயிருந்தாங்க..
அடுத்து அதானியின் பங்குதாரர்கள் கூட்டத்தை மக்களவையில் நடத்தலாம் – மஹுவா மொய்த்ரா
ஜி : ஆமாப்பா.. இது தெரியாம இவ்வளவு நாளா ஸ்டார் ஹோட்டல்ஸ்ல நடத்த விட்டு என் முதலாளிக்கு நஷ்டம் ஏற்படுத்தினேப்பா..
பாராளுமன்றத்துல அத்துமீறி நுழைஞ்ச சம்பவத்தை திசை திருப்ப 150 MPகள சஸ்பெண்ட் பண்ணானுங்க. MPகள சஸ்பென்ட் பண்ணது பிரச்னையாக இப்ப துணை ஜனாதிபதிய கிண்டல் பண்ணாங்கன்னு இன்னொரு Diversion. இப்ப எல்லோரும் பாராளுமன்ற சம்பவம், பாஸ் கொடுத்த பிஜேபி MP பத்திலாம் மறந்துட்டாங்க செமல.
நெல்லை அண்ணாச்சி
ஸ்ரீராமர் கோவில்..no entry for அத்வானி… முரளி ஜோஷி…
# நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்…!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
இதே நாள்… இதே தாமிரபரணி: நூற்றாண்டு வெள்ளத்தின் நினைவலைகள்!
நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?