பிரேக்கிங் புயல் எப்ப கரையை கடக்குமோ? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

 

புயல் வருது புயல் வருதுனு நம்ம டிவிக்காரங்க போடுற பிரேக்கிங் மியூசிக் இருக்கே… அதான்யா புயலை விட அதிக பயமா இருக்கு. ஒரு படத்துல வடிவேலு ஒரு வாய்க்காலை பனை மரப் பாலத்துல கடந்து வரும்போது, முதலை வருதுனு சொல்லி கரையில இருந்து ஒருத்தர் கத்துவாரு… அந்த சத்தத்துலயே வாய்க்கால்ல விழுந்துவிடுவாரு வடிவேலு. அப்படித்தான்யா இருக்கு உங்க பிரேக்கிங் நியூஸ் சேனல் மகாராஜாக்களே… கொஞ்சம் பாத்து பண்ணுங்கய்யா

நீங்க அப்டேட் பாருங்க

 

Dr.Aravind Raja

தனிநபர் செய்த குற்றத்துக்கு துறையவே குற்றம் சொல்லலாமா?

திமுகவுல 7 வது வட்டத்துல 3 வது வார்டு செயலாளரோட மச்சினனோட கொழுந்தியா புருசன்
டீக்கடைல சண்ட போட்டதுக்கு முதல்வர பதவி விலக சொன்ன மூதேவி..

James Stanly

திவாரி நவ் ~

இடையில ஜீ நம்ம ஆபீசுக்கு எதும் வந்தாரானு செக் பண்ணு தேவா.. நேரமே சரியில்ல..

Mannar & company

எதையும் நீ தேடிப் போகாதே… உனக்கு தகுதி இருந்தால் அது உன்னை தேடி வரும்!

இப்படி சொல்லியே உட்கார வச்சிட்டீங்களேடா இப்ப 32 வயசாச்சி இன்னும் கல்யாணம் நடக்கலடா.

மெக்கானிக் மாணிக்கம்..

எடப்பாடி நவ் ~

ஏம்ப்பா… என்னப்பா இது ED யை கைது பன்ற அளவுக்கு முதல்வருக்கு அதிகாரம் இருக்காமே…
இது தெரியாம அவனுங்க வந்து கேட்டப்பலாம் பணம் குடுத்து அனுப்பிட்டேன்ப்பா..

சொல்லக்கூடாதாம்

சிவக்குமார் –

எப்படியோ இந்த ED பிரச்சினையில நம்மள மறந்துட்டாங்க.
இப்படியே இந்த இரண்டு நாள கடந்துட்டா போதும். அப்புறம் தப்பிச்சிடலாம்.

சாரே சைகாட்ரிஸ்ட்

லஞ்சம் வாங்கி #மோடி சிக்கிட்டா கூட பேசாம இருப்பாய்ங்க போல
இந்த #ED சிக்கிட்டதுக்கு சங்கிகள் இந்த பொங்கு பொங்குறாய்ங்க

Sivajisiva

ED ~ எடுத்த உடனே யாரையும் ரெய்டு பண்ணிடுவீங்க அப்படி தானே..

அதான் இல்ல.

ரெய்ட் பண்ணாம இருக்க முத லஞ்சம் கேட்போம்.. குடுக்கலன்னாதான் ரெய்டே போவோம்…

I.N.D.I.A 𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗

மாமா தமிழ்நாட்ல ரெய்டு மாமா..!

அமலாக்கதுறையவிட்டு தமிழ்நாட்டு கண்லயே ஆட்டுறமே கெத்துதானே நாம..

அய்யோ மாமா ரெய்டு நடக்குறதே அமலாக்கதுறை ஆபிஸ்லதான்

வாத்தி (I.N.D.I.A)

அதிகாரவர்க்கதின் மேலயே கை வஷ்ட்டாங்க ஜி..
.
அங்க ED பாத்துக்கிட்டு சும்மாவா இருக்கு?
.
கை வச்சதே ED மேல தான் ஜி..

Writer SJB

என்ன ஏதாவது சிக்கிச்சா..?

நம்ம ஆளு தான் ஒருத்தன் சிக்கிட்டான்..!

ஓ மை காட்.. என்னய்யா சொல்ற…?

vijaychakkaravarthy

~ “லைப்ல ரொம்ப கஷ்டப்படுறீங்களே… ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்துல பிறந்தீங்களா சார்…”

“அதான் இல்ல… இல்லாத கஷ்டத்த உருவாக்கி நானே கஷ்டபடுவேன்…”

ArulrajArun

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை பண்ணிட்டு இருக்காங்க மாமா

எந்த அரசு அதிகாரி வீட்டுல மாப்ள

அரசு அதிகாரி வீட்டுலயா மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப் 

ரூ.5 போதும்: சென்னை மெட்ரோவின் ‘புயல் ஆஃபர்’!

மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்… -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!

+1
2
+1
11
+1
0
+1
1
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *