update kumaru December 19 2023

விலைபோன வீரம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஆபிஸ்ல தான் ஐபிஎல் பத்தி பேசி நம்மள டயர்டு ஆக்குறாங்கன்னு டீ குடிக்க, அண்ணாச்சி கடைக்கு போனா அங்கேயும் ரெண்டு பேரு ரொம்ப உக்கிரமா  இதைப்பத்தி பேசிட்டு இருந்தாங்க.

கண்டுக்காத மாதிரி ரெண்டு பஜ்ஜிய பிச்சி வாயில போட்டுக்கிட்டே என்ன தான் பேசுறாங்கன்னு கேட்டேன். அதுல ஒருத்தரு, ‘ஏன்பா மத்த எடத்துல எல்லாம் காசு வாங்குனா வெலை போயிட்டான்னு சொல்லி திட்டுறாங்க.

ஆனா இங்க மட்டும் அதிக வெலைக்கு போனா அவங்கள கொண்டாடுறாங்கன்னு,”  ஒரு அருமையான தத்துவத்தை அசால்ட்டா சொன்னாரு.

அதுக்கு கூட இருந்தவரு , ”போன மாசம் உலகக்கோப்பையில தோத்தப்ப கழுவி ஊத்திட்டு, இந்த மாசம் அவங்களையே ஏலத்துல போட்டி போட்டு எடுக்குறாங்க. எல்லாம் பணம் படுத்துற பாடுன்னு,” கவுண்டர் குடுத்தாரு.

‘உண்மையை சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம். மாறி,மாறி ரெண்டு பேரும் உண்மைய சொல்லுறீங்க. யாரு சாமி நீங்கள்லாம்னு மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டே, அண்ணாச்சி கிட்ட காச குடுத்துட்டு ஆபிஸ்க்கு நடைய கட்டுனேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்
அடுத்த வருசம் extra சம்பாதிக்க என்ன வழி னு யோசிக்கிறத விட்டுடு.. அவன் இத்தன கோடிக்கு வாங்குனது waste.. இவன் அவ்ளோ worth இல்ல னு.. இந்த IPL Auction எல்லாம் நமக்கு தேவையா..
ஆக்சன கூட 1.25 கோடி பேர் பாத்துட்டு இருக்கானுக, செவ்வாய்க்கிழமை மதியம் நம்மள மாதிரியே வெட்டியா கோடிக்கணக்குல ஆள் இருக்கானுக நினைக்கும்போது பெருமையாக உணர்கிறேன்.
Yaar Paatha Vela Da Ithu
இப்ப எதுக்கு கமின்சுக்கு 21 கோடி குடுத்து எடுக்குறா தோத்தா அந்த வலி எப்பிடி இருக்கும்னு அவனுக்கு தெரியணும்.
The Cheems…
ஏய் இங்க வா, நீ suspended.. தண்ணி கேன் போட வந்தவன் சார் நானு.