கொம்பன் தென் மாவட்டத்துல எறங்கிட்டான் மாமா: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

சென்னை புயல், மழையால தத்தளிச்சி, தடுமாறிட்டு இருந்தப்போ, ‘இங்க வெயில் பல்ல காட்டுது. வெளியில போகவே முடியல. மரத்தை புடிச்சி ஆட்டினா தான் காத்து வருதுன்னு’ தென் மாவட்டத்து மக்கள் காமெடி பண்ணிட்டு இருந்தாங்க.

இப்போ தென் மாவட்டங்கள்ல மழை வெளுத்தெடுக்குது. அதிலயும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் எல்லாம் ரெட் அலர்ட் கொடுக்குற அளவுக்கு நிலைமை இருக்கு.

இதைப்பார்த்த சென்னைக்காரங்க இப்போ, ‘உங்களுக்கு பிரட், பன், மெழுகுவர்த்தி எதுவும் வேணுமான்னு?’ தென் மாவட்டத்து சொந்தங்களை கேட்டுக்கிட்டு இருக்காங்க.

இதை பார்த்ததும் தளபதி விஜய் சொன்ன, ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ பஞ்ச் டயலாக் தான் எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

WRITER SJB

மத்திய அரசுக்கு அடி பணியாவிட்டால் அமலாக்கத்துறை ரெய்டு வரும்னு உங்க தலைவர் உங்களுக்கு சொல்லித் தரலையா..?

அமலாக்கத்துறை அதிகாரியையே எப்படி கைது செய்து ஜெயில்ல அடைக்கணும்னு எங்க தலைவர் சொல்லித் தந்திருக்கார்..!

கிச்சா
நாரோயிலான்ஸ் டு தின்னவேலியன்ஸ் எங்களுக்கு ஒன்னும் இது புதுசு இல்ல..
நீங்க பத்திரமா இருங்க….
Habitual offender
200cm மழைங்குறாங்க, நாங்க பண்ற அதிகபட்ச விவசாயமே பணங்கிழங்குக்கு கொட்டைய பதியம் போடுறது தான். எங்களுக்கு எதுக்குடா இவ்வளவு மழை ?
+1
0
+1
14
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0