டீக்கடையில சாயங்காலம் பஜ்ஜியை தின்னுக்கிட்டே நண்பர் கிட்ட பேசிட்டு இருந்தேன். சென்னை புயல்ல ஆரம்பிச்சு பொடிநடையா அப்படியே நாடாளுமன்றம் வரைக்கும் போய்ட்டாரு. அட நமக்கு ஏன்பா அரசியல் அதுவும் டீக்கடையில நின்னுக்கிட்டுன்னு கேட்டேன்.
டீக்கடைக்காரரு மூஞ்சில சுடு தண்ணிய ஊத்துனாலும் பரவால்ல நான் இதை பேசியே தீருவேன்னு சொல்லிட்டு, ”ஏன்பா நாடாளுமன்றத்துக்கு அம்புட்டு பெரிய செங்கோல் வச்சாங்களே. செக்யூரிட்டிய போட்டாங்களான்னு” ரெண்டே வரியில திருக்குறள் மாதிரி கேட்டாரு.
நாம இதுக்கு பதில் சொன்னா வெவகாரம் வேற மாதிரி போயிரும்னு, கம்முன்னு காச டீக்கடை அண்ணாச்சி கிட்ட கொடுத்துட்டு நடைய கட்டிட்டேன். நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
black cat 2
புதிய நாடாளுமன்ற கட்டடத்துல ரெண்டு பேர் அத்துமீறி நுழைஞ்சி கண்ணீர் புகைக்குண்டு வீசிருக்காங்க
2024 எலக்சன் க்கு எதுவும் ஸ்கெட்சா?
Writer SJB