பத்திரப் பதிவின் போதே படகு இலவசம்: அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

காலையில லேட்டாகிடுச்சுன்னு அடிச்சு புடிச்சு புயல் வேகத்துல ஆபிஸ் வந்துட்டு இருந்தேன். ரொம்ப நாளா சைலண்ட்ல இருந்த நண்பர் திடீர்னு கால் பண்ணி பேசினாரு.

சொல்லுங்க நண்பா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன். நான் நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு, பிளாட் ஒண்ணு கம்மியான விலைக்கு வருது வாங்கிக்கறீங்களான்னு? கேட்டாரு.

நானும் நண்பர் ரொம்ப அக்கறையா விசாரிக்கிறாரேன்னு எந்த ஏரியான்னு சொல்லுங்க பாப்போம்ன்னேன். பதிலுக்கு அவர் வேளச்சேரின்னு சொல்ல, நான் கடைசி வரைக்கும் வாடகை வீட்டுல இருந்தாலும் பரவாயில்லை.

வேற யாருக்காவது வித்தாலும், பதிவு பண்றதுக்கு முன்னாடி படகு கொடுத்துருவீங்கள-னு கேட்டுட்டு போனை  கட் பண்ணிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

black cat 2

உங்களை எப்போது முதலமைச்சராக பார்ப்பேன் னு என்னோட 85 வயசான மாமியார் கேட்டாங்க

MLA க்கு நிக்க கூட யாரும் இல்லன்னு எப்பிடி சொல்வேன்..!

Manjari

நான் துணை முதல்வராவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்!- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சின்னவர் சிக்னல் கொடுத்தாச்சு… பெரியவர் புரிஞ்சிக்கிட்டா சரி..!

எனக்கொரு டவுட்டு!?

இந்த சூப்பர் சிங்கர் மேடை என்னோட பல வருஷ கனவு..

வயசு எவ்ளோ

பத்து..

சரண்யா

தெருமுனைல Toll Gate ஒன்னு கட்ட போறோம்… ஒரு 500 ரூபா Donation குடு…

Clara

சென்னை ல புயல் வந்த போது…இங்க வெயில் பொளக்குது..மரத்தை பிடிச்சு ஆட்டுனா தான் காத்து வருது,
வத்தல் காய போட போறேன்னு வெறுப்பேத்திய South Tamilnadu மக்களே!! ரெடியா இருங்க..

 

vithyaprakash ponnusamygounder

நிவாரணப் பொருட்களில் நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதில்லை- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

ஆமா இவர் ஒட்ட மாட்டார். கட்சி நிர்வாகிகள் தான் ஒட்டுவாங்க.

Mannar & company

ஸ்கூலுக்கு லீவு சொன்னப்பிறகு காய்ச்சல் நின்னுப்போகிற மாதிரிதான்,

ஸ்கூலுக்கு லீவு விட்டதும் மழையும் நின்று விடுகிறது!

https://twitter.com/Cat__offi2/status/1733974751062741354

மயக்குநன்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது; வரும் 2026-க்குள் வெற்றி பெறுவோம்!- அமித்ஷா. 
இதைச் சொல்லியே… 2024-ல வெற்றி பெற பிளான் பண்ணுவாங்களே..?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel