டிசம்பர் ஆனா போதும்.. சென்னைக்கு மழைன்னு சொல்லி ஆரஞ்சு, ரெட்டுன்னு கலர் கலரா அலர்ட் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க… update kumaru December 1
ஆனா இந்த வருஷம் டிசம்பர் பொறந்த மொத நாளிலேயே அமலாக்கத்துறை ஆபிசர் லஞ்சம் வாங்கி, கையும் களவுமா சிக்கி, பெரிய இடிய EDக்கு போட்டுருக்காரு…
இதுவரை டிபென்ஸ் பண்ணிட்டு இருந்த சி.எம். ஸ்டாலின், இப்போ அட்டாக்குல இறங்கிட்டாரு…
அதனால இப்போதைக்கு ஆரஞ்ச் அலர்ட் சென்னைக்கு இல்ல… அமலாக்கத்துறைக்கு தான்!
நீங்க அப்டேட்ட பாருங்க!
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
கூகுள்ல கவுரவ டாக்டர் பட்டம் கிடைக்குமான்னு கேட்கிறாம்பா…
Writer SJB
சோழர்கள் காலத்தில் கட்டிய கல்லணை மற்றும் கோவில்கள் 2000 ஆண்டுகளாகியும் உறுதியாக உள்ளன. திமுக போட்ட ரோடு இரண்டு வருடம் கூட தங்குவதில்லை- அண்ணாமலை
புது பார்லிமென்ட் கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் செய்ய கூப்பிட்டீங்களாமே..?
black cat 2
சென்னைல வெள்ளம் வந்துருச்சுனு சொல்றாங்களே சார்…
அப்படி சொல்றாங்களா?
ஆம்…. அது வெள்ளம் தான் மகிழ்ச்சி வெள்ளம்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதான் சென்னைல தான் மழைத்தண்ணி எல்லாம் வடிஞ்சுருச்சே, அப்புறம் ஏன் ரோடு முழுக்க தண்ணியா இருக்கு?
சங்கி & சாம் சங்கிஸ்:
அலோ.. இப்ப ரோட்ல ஓடறது மழைத்தண்ணி இல்லை, எங்க கண்ணீரு..