இன்னைக்கு டீ குடிக்க போன எடத்துல அதிமுக காரர் ஒருத்தரு… ”எப்படி பாஜகவ பழிக்குப்பழி வாங்கிட்டோம் பாத்தியா?”னு கேட்டாரு…
என்ன சொல்றாரு… ஒரு வேள ஜென்மத்துக்கும் பாஜக கூட சேர மாட்டோம்னு அக்ரிமெண்ட் ஏதும் போட்டாங்களானு நெனச்சிட்டு என்ன விஷயம்னு கேட்டேன்.
அதுக்கு அவரு… ”முந்தா நேத்து எங்க கோட்டை கோவைல இருந்து முக்கிய நிர்வாகிங்க பாஜகல இணைய போறதா அண்ணாமலை அள்ளி விட்டாரு…”
அது சரி நீங்க எப்படி பழிவாங்குனீங்கனு கேட்டேன்.
அதே மாறி இன்னைக்கு நாங்களும் பாஜக எம்.எல்.ஏ ரெண்டு பேரு அதிமுகல இணைய போறதா சும்மா கிள்ளி விட்டோம்… எப்படி பழிக்கு பழி வாங்குனோம் பாத்தியா?” கேட்டு அவரே சிரிச்சிக்கிட்டாரு…
இந்த லேடியா அந்த மோடியானு கெத்தா சவால்விட்ட தலைவியோட கட்சி… ஆனா இன்னைக்கு உங்ககிட்டு கெடந்து படுற பாடு இருக்கேனு நெனச்சிக்கிட்டு கெளம்பிட்டேன்…
நீங்க அப்டேட் பாருங்க…
SANKARRAMANI
“ஓரிரு வாரத்தில் பாமக நிலைப்பாட்டை அறிவிப்போம்.” – அன்புமணி
“அப்படி ஒண்ணும் தல போற அவசரம் இல்ல டாக்டர் நீங்க தேர்தல் முடிஞ்ச பிறகு கூட சொல்லுங்க.”☹️
✒️Writer SJB✒️
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சியை நடத்தினர் ~ மோடி
பாஜக வாஜ்பாய் ஆட்சியை 13 நாட்களிலேயே கவிழ்த்தார்..
மோடியா இந்த லேடியா என்று உங்களுக்கே சவால் விட்டார்..
அதெல்லாம் மறந்து போச்சா கோப்பால்..?
velu
தமிழ்நாட்டில் பிஜேபி 18 சதவீத ஓட்டு வாங்கும் – புதியதலைமுறை
கூவுனாலும் ஒரு அளவு வேணாமாப்பா?
balebalu
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது எப்போ நிஜம் ஆகிறதோ இல்லையோ
தேர்தல் சமயங்களில் நிச்சயம் நிரூபணம் ஆகிறது
கட்சித் தாவல்😜
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும்” – தேர்தல் நேரத்தில் பரபரப்பு கிளப்பிய நடிகர் பிரசாந்த்
# அய்யய்யோ.. அப்ப பொங்கல் தீபாவளிக்கு வாழ்த்து..?
குருநாதா
இந்த வாழ்க்கை ஒருநாள் நமக்கு புடிச்ச மாதிரி மாறும்…
மாறி…
நாம இன்னைக்கு வாழ்ற வாழ்க்கையே தேவலை-னு நெனைக்க வைச்சுரும்.
தனி ஒருவன்
ஜீ ~என்னடா நான் பேசிக்கிட்டே இருக்கும் போது எல்லாரும் போறாங்க
மலை ~ஆறு மணிக்கு பானி பூரி கடை திறக்கணும் ஜீ அதன் போறாங்க
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
இமாச்சல் : மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி!
ரஞ்சி கோப்பையில் சதமடித்து… சிஎஸ்கே பவுலர் புதிய சாதனை!