கோவம் வந்தா குணம் போய்டுதே : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு டீக்கடைக்கு போற வழில ‘யோகாசனம் செய்தால் மன அமைதி வரும்னு ஒரு பில்டிங் முன்னாடி வெளம்பர போர்டு தொங்கிட்டு இருந்திச்சி…

அத பாத்ததும்… சரி உள்ள போய் விசாரிக்கலாம்னு போனா… அங்க இருந்த டிவில…  ‘முதியவரிடம் இருந்து பொன்னாடையை புடுங்கி எறிந்த சிவகுமார்’னு செய்தி ஓடிட்டு இருந்துச்சி… இதுக்கு முன்னாடி செல்போனையும் இப்படி தான் புடுங்கி எறிஞ்சாரு…

யோகாசனத்தோட பிராண்ட் அம்பாசிட்டரா எனக்கு தெரிஞ்ச சிவகுமாரே இவ்ளோ கோப படுறாருனா? யோகாசனத்த விட மனுச குணம் ரொம்ப முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

அப்படியே வெளிய வந்து டீ குடிச்சிட்டு ரூம்க்கு கெளம்பிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“நான் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன்” ~ ஓபிஎஸ்

அப்புறம் இந்த விசயம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாம மட்டும் பார்த்துக்கோங்கபா.


mohanram.ko

திங்கட்கிழமையில கூட ஜாலியா இருக்கயேடா…

எனக்கு weekly off திங்கட்கிழமை டா

சரவணன்

டிரைவர் இன்றி 70 கிலோமீட்டர் 5 ஸ்டேஷன்களை தாண்டி தறிகெட்டு ஓடிய ரயில்.

# மக்கள் டு வந்தே பாரத் டிரெய்ன்:

அங்கங்க டிரெய்ன் எல்லாம் டிரைவரே இல்லாம பல கிலோமீட்டர் ஓடிட்டு இருக்கு நீ இன்னும் மாடு குறுக்க வந்தாலே டேமேஜ் ஆகி வாரக்கணக்குல எந்திரக்க முடியாம படுத்துக்கற..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகல்

# GK.வாசன் பி லைக்:

ஓ.. நம்ம கட்சில நிர்வாகிகள்லாம் இருக்காங்களா..?

✒️Writer SJB✒️

காதலித்துப் பார்
அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பிடிக்கும்..!

கல்யாணம் பண்ணிப்பார்
அவள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும்..!!!

balebalu

நிலம், நீர், ஆகாயம் ன்னு எல்லாத்துலயும் போட்டோஷூட் நடத்தியாச்சு

அடுத்து எரிமலை , ஹாட் ஏர் பலூன் ன்னு ஷுட்டிங் நடத்தி முடிச்சுட்டா

பஞ்ச பூதங்களையும் வென்றவர்னு விளம்பரம் பண்ணிக்கலாம் 😀

ஜிக்கா

க்ரஷ்:- என்னை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போ பேபி..

மீ : வேணாம் பேபி போதைப்பொருள் கடத்தினேன்னு போலீஸ் என்ன கைது செஞ்சிருவாங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

போதை வழக்கில் ஜாபர் சாதிக்… அதிர்ச்சியில் அமீர்

‘மார்ச் 15க்கு பிறகு Paytm FASTags வேலை செய்யாது!’ : மாற்றுவழிகள் இதோ!

+1
1
+1
12
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *