அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு சாயந்தரம் டீ குடிக்காலம்னு டீக்கட போனா… அங்க, ’வர நாடாளுமன்ற தேர்தல்ல  தமிழ்நாட்டுல 40 தொகுதிகளையும் பாஜக ஜெயிக்கும்னு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசமா டிவில பேட்டி கொடுத்துட்டு இருந்தாப்ல…

இதே கேட்ட டீ கடக்காரரு, ”அப்ப இவரு நீலகிரில நின்னு தேர்தல்ல ஜெயிச்சி எம்.பி ஆகியிருக்கலாம்ல…  எதுக்கு ராஜ்யசபா எம்பி ஆகனும்?னு அதவிட ஆவேசமா திருப்பி கேள்வி கேட்டாரு..

அதோட நிக்காம, ”குறிஞ்சி நில தலைவர் முருகர் மாதிரி மலையில நின்னு மக்கள பிடிக்கிறத விட்டுட்டு எதுக்கு மத்தியபிரதேசத்துல போய் எம்.பி ஆகனும்’னு இன்னும் சூடா பொங்குறாரு…

ஆகா இவர்ட இனியும் டீ கேட்டா… அடுப்புல இருக்குற கங்க அள்ளி வீசுனாலும் வீசுவாருன்னு அங்கேருந்து கெளம்பிட்டேன்

நீங்க அப்டேட் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பிரதமர் மோடி குறித்து கேள்விக்கு ’பாசிசவாதி’ என பதிலளித்த கூகுள் AI ஜெமினி

குழந்தையும் ஜெமினியும் பொய் சொல்லாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க..

Mannar & company™🕗

ஞாயிற்றுக்கிழமைல எவ்வளோ நேரத்துக்கு குளிக்காம இருக்கிறமோ

அவ்ளோ நேரத்துக்கு நாம ஞாயிற்றுக்கிழமை லீவை என்ஜாய் பண்றோம்னு அர்த்தம்!

#சன்டே

balebalu

சசிகலாவின் புதிய வீட்டிற்கு சென்று ரஜினி வாழ்த்து – செய்தி

நேர்மையான சிஸ்டத்தில் உழைத்து சம்பாதித்து கட்டிய வீடு ன்னு நினைத்திருப்பாரோ 🤔

தர்மஅடி தர்மலிங்கம்

ஊழல் அமைச்சர்களை வேட்டையாடப் போகிறோம்” – அண்ணாமலை!

வேட்டையாடி பாஜகவுல சேர்த்துடுவீங்க… அதானே…

Dr Iniya

மழையில்லாம ரோட்டோரம் வாடிட்டு இருந்த காட்டு செடியை பிடுங்கி

வீட்டுல தொட்டில வச்சு தினமும் தண்ணி ஊத்தினாலும் செழிப்பா வளரல ஏனோ

’கஸ்டப்பட்டாலும் சுதந்திரம் முக்கியம் போல’

வசந்த்

உடல் எடையை குறைக்க தினமும் லெமன் டீ குடிக்கிறேன் ~ அவள்

அப்புறம் ஏம்மா அது கூட ரெண்டு முட்டை போண்டா சாப்புடுற?? ~ மீ

mohanram.ko

மேனேஜர் எடுக்கும் முடிவை, எல்லோரும் ஆமோதிக்கும் நிகழ்விற்கு

‘மீட்டிங்’ என்று பெயர்

✒️Writer SJB✒️

சினிமா வாய்ப்பு குறைந்து விட்டதால் தான் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் – தமிழிசை சௌந்தர்ராஜன்

பேஷன்ட் யாரும் வரலனு தான் நீங்களும் அரசியலுக்கு வந்தீங்களா அக்கா..?

செங்காந்தள்

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதன் டிஜிட்டல் வெர்ஷன்

என் மொபைல் பாஸ்வேர்ட் இல்லாதது என்பது…!!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

IND vs ENG: புதிய சாதனைகளை அடித்து நொறுக்கிய அஸ்வின், ரோகித் சர்மா

பாஜக கூட்டணியில் தமாகா: அறிவிக்கத் தயாராகும் ஜி.கே.வாசன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவோடு கூட்டணி… ராமதாஸ் போடும் 3 கணக்குகள்!- திமுக கூட்டணியில் திருமா, வைகோ அதிருப்தியா?

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *