இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப, அங்க நண்பன் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வச்சிட்டு இருந்தான்.
அவங்கிட்ட என்னடானு விசாரிச்சா… ‘மாப்ள இண்டர்ஸ்டெல்லர்னு ஒரு இங்கிலீஸ் படம் புதுசா ரிலீஸ் ஆயிருக்கு… இன்னைக்கு பாக்கப் போறேன், அதான் ஸ்டேட்டஸ் வச்சிட்டு இருக்கேன்”னு சொல்லிட்டு கெளம்பிட்டான்.
அடப்பாவி படம் ரிலீஸாகி 10 வருஷம் ஆகுது… அதுக்கூட தெரியாம அத புதுப்படம்னு பாக்கப் போறான். அதுவும் இங்கிலீஸ் படம் வேற.. என்னடா இது கிறிஸ்டோபர் நோலனுக்கு வந்த சோதனனு நெனைச்சிட்டு டீய குடிச்சிட்டு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls feb 9

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இவ்வளவு சான்ஸ் கிடைச்சா, கிரிக்கெட்டே விளையாட தெரியாதவன் கூட விளையாண்டு பழகி செஞ்சுரி போட்டுருக்க தான் செய்வான்..
இப்ப ரோகித் Promotional group கிளம்பி இன்னும் ஒரு வருசத்துக்கு இதையே சிலாகிச்சு டைம்லைனை ஸ்பாயில் பண்ணுவானுக கெரகத்தை..

K. RAJESH
சில மாநிலங்கள் தங்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது என்பது, அற்ப சிந்தனை – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
நாங்கள் உழைத்து, ஈட்டும் வருமானத்திற்கேற்ப, நீங்கள் வரி கேட்பது என்பது அற்ப சிந்தனை – இந்திய நடுத்தர வர்க்க குடிமகன்.

கிருஷ்ணா
சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு – எடப்பாடி
அதாவது அமலாக்கத்துறைக்கு பயந்தும் வேற போக்கிடம் இல்லாமலும் பாஜக கூட கூட்டணி வைக்க போறோம், அதனால பாஜகவை புடிக்காத 97% மக்களும் ஓட்டு போடுங்க, புடிச்ச 3% சங்கிகளும் ஓட்டு போடுங்க

சரவணன். 𝓜
என்னால சுயமா எந்த முடிவும் எடுக்க முடியாதுன்னு சொல்றாங்க..
அப்படின்னு யாரு சொன்னது?
இருங்க.. அப்படி யார் சொன்னது ன்னு என் மனைவி கிட்ட கேட்டு சொல்றேன்..

வருண்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படதெல்லாம் அந்த காலம்.
சிபில் ஸ்கோரால் நிச்சயிக்க படுவது தான், இந்த காலம்.

செங்காந்தள்
பேப்பர் ஸ்ட்ராவில் குடித்தால் அது அருவருப்பாக வாயில் கரைவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம்.. மீண்டும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற உத்தரவு..!
எக்ஸ்ட்ரா பூமி எதுவும் இல்லைனு அவருக்கு தெரியுமா?

Karthick
அடுத்து எந்த நாட்டுக்கு Illegal ah போகலாம்னு இருக்கவங்களுக்கு
எதுக்கு தமிழ்நாட்டோட நிதிய தாரை வார்க்கனும்?
நல்லா பண்றீங்க மோடிஜி
Mannar & company™🕗
Valentine’s day’ வரும்போது நினைப்பெல்லாம் எதிர்காலத்துக்கும்,
‘Wedding day’ வரும்போது நினைப்பெல்லாம் கடந்த காலத்துக்கும் போயிடுது!

செல்வம்
இயற்கையாக நிகழும் நிகழ்வுகள் கூட தன்னால் நடந்தது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் தன்னால் அடைந்த தோல்விகளைக் கூட தனக்குச் சம்பந்தமில்லை என்று வேறு யாரையாவது பொறுப்பாளி ஆக்கி விடுகிறார்கள்…!!!
லாக் ஆஃப்