வருங்காலம்… சிறார்களின் கையில்! – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls feb 11

இன்னைக்கு தைப்பூசம் லீவுனால கிரெளண்டுக்கு கிரிக்கெட் விளையாட போனோம். அங்க எங்க அணிக்கும், எதிர்த்த அணிக்கும் பிரச்சன. கடைசியில விளையாடாமலே டீக்கடைக்கு வந்துட்டோம். update kumaru memes and trolls feb 11

அங்க வந்த ரெண்டு சின்ன பசங்க டீ குடிச்சிட்டு இருந்தாங்க… அத பாத்ததும் கொஞ்சம் ஷாக் ஆ இருந்துச்சி… அப்போ, ஒரு சின்ன பையன். ‘டேய் நம்ம தலைவரு, நமக்குன்னு ஒரு அணிய அறிவிச்சிருக்காருடா… இனி கட்சியும் சரி, ஆட்சியும் நம்ம கையில தான்’னு சொல்லிட்டு ஜாலியா கோலிக்காய உருட்டிட்டு கிளம்பிட்டாங்க…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நிறுத்திவைத்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதிகள் சரமாரி கேள்வி!

ஆளுநர் ~ போதும் போதும்.. கேள்வி லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு.. தீர்ப்பு சொல்ல வாயில கொஞ்சம் எச்சில் மிச்சம் இருக்கட்டும்..

கடைநிலை ஊழியன்

தலைவரும், பிரசாந்த் கிஷோரும்..

2026 ல கூட்டணிக்கு என்னென்ன இலாகா குடுக்கலாம் னு நாளைக்கு பேச போறாங்கலாம்..

balebalu

தவெகவுக்கு 20% வாக்குகள் உள்ளன – பிரஷாந்த் கிஷோர் அறிக்கை

ஒருவேளை பனையூரில் சர்வே எடுத்து இருப்பாரோ 🤔

mohanram.ko

டோலி ~ பிப்ரவரி 14 என்ன நாள்

மீ ~ வெள்ளிக்கிழமை

டோலி ~ அப்புறம், கல்யாணம் எப்படி நடக்கும்

பாதகன்

மோடி ~ அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

தைப்பூசம் வரைக்கும் இறங்கி அரசியல் பண்ண வேண்டியதா இருக்கு.. பாவம் மனுஷன் 😂😂

கடைநிலை ஊழியன்

promise day அன்னைக்கு சொல்றேன்.. இனி சரக்கடிக்கவே மாட்டேன்..

சாயங்காலம் பார் ‘க்கு போவம் சொன்ன.. அப்ப வரலையா நீ..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share