இன்னைக்கு வருஷத்தோட கடைசி நாளாம். அதனால வாட்ஸ் அப்ல இருக்குற சில பேரு… ’நன்றி நண்பா… நன்றி தல’னு பார்வர்ட் மெசஜ் பாஸ் பண்ணிட்டு இருந்தாங்க.
’என்னடா நன்றியெல்லாம் சொல்றேங்களே.. அதே மாறி கொடுத்த காசையும் திருப்பி கொடுத்துருவாங்க’னு நம்பி, ரெண்டு பேர்கிட்ட ‘நன்றில்லாம் தேவையில்லாப்பா… அன்னைக்கு கொடுத்த 2000 ரூவாய மட்டும் அனுப்பி விடுறீங்களா?’னு கேட்டேன்.
பதிலே சொல்லாம ஆப்லைனுக்கு போயிட்டாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் நான் கொண்டுவந்தது” – எடப்பாடி பழனிசாமி
காண்ட்ராக்ட் கூட உங்க சம்பந்திக்கு தான் தர்றதா பேச்சு இருந்துச்சாமே, உண்மையா..?

꧁ Dr Mubarak ???? ꧂
நியூசிலாந்தில் பிறந்தது 2025ஆண்டு – செய்தி #
எங்க ஊர்ல அடிக்கடி புதிய இந்தியா பிறக்கும் போவியா..?! ????

▶படிக்காதவன்™✍
காலண்டர் மட்டுமே தான் மாறியிருக்கிறது என்பதற்கு முதல் சாட்சியாக காலண்டர் அதே இடத்தில் மாட்டப்படுவதுதான்…

காளையன்..
வருஷா வருஷம் நான் நைட் பணிரெண்டு மணி வரைக்கும் முழிச்சிருந்து..
எல்லாருக்கும் வாழ்த்து சொல்லுவீங்களா??
கமலையும் சில்க்கையும் பாத்துட்டுதான் தூங்குவேன்.. ????

Sasikumar J
கால் கிலோ சிக்கன் 65 சாப்பிட வேண்டியது அதுல இருக்க கொழுப்பை குறைக்க கால் துண்டு எலுமிச்சை பழம் அது மேல பிழிஞ்சா போதும்னு ஒரு நம்பிக்கை வைக்க வேண்டியது…!

Joe…????????
இந்த 2025 ல பெருசா ஒண்ணும் ஆசையில்லை,
நமக்கு பிடிச்சமாதிரி ஒருநாள் வாழ்க்கை மாறலன்னாலும்,
நமக்கு பிடிச்ச வாழ்க்கைய “ஒருநாள் மட்டுமாவது” வாழ்ந்துறணும்.
அவ்ளோதான்.

Mannar & company™????
ஜிம்முக்கு போகாமலேயே..
வீட்டிலேயே பண்ணுவிங்களா..
அதில்லைய்யா.. ஜிம்முக்கு போகாமலேயே இந்த வருச புத்தாண்டு சபதம் முடிஞ்சிப் போச்சின்னு சொல்ல வந்தேன்.

கடைநிலை ஊழியன்
நியூ இயர் ரெசொலூஷன் எல்லாம் ரெடி பண்ணி வச்சாச்சு..
புது வருஷம் பிறக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி..

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
2024… தமிழ்நாட்டில் செய்த சம்பவங்கள்!
2024 : சங்கி முதல் கங்குவா பிளாப் வரை… சினிமா உலகம் சந்தித்த சம்பவங்கள்!
குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது யார்? – எடப்பாடிக்கு எ.வ.வேலு பதில்!