ஆளுநர் பதவி முக்கியம் போல : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு விஜய் ஆளுநர பாக்கப்போனது தான் டாக் ஆஃப் தி டே- வா இருந்திச்சி. அத பேப்பர்ல படிச்சிட்டு டீக்கடைல ஒரு தம்பி ரொம்ப பெருமையா பேசிட்டு இருந்தாரு.

அவருகிட்ட ஒரு பெரியவரு போயி, ‘தம்பி, விஜய் தானே போன மாசம் ஆளுநர் பதவிய அகற்றனும்னு கட்சி தீர்மானமா வாசிச்சாரு’னு கேட்டாரு…

அதுக்கு அந்த தம்பி, ஏதாச்சி சொல்லுவாருனு பாக்குறேன்… பாக்குறேன்… பதில் சொல்லாமயே தம்பி நைசா நகந்துட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சரவணன். ????

உலகிலேயே தொன்மையான மொழி தமிழ்: மோடி

இப்ப எலக்சன் கூட இல்லையே.. எதுக்கு இத சொல்லிக்கிட்டு இருக்காரு.. என்னங்க இது எதுவுமே புரியலையே?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ரோகித் சர்மா – அடுத்த டெஸ்ட்ல ஜெயிப்போம்…

ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ் ~ இவரு எதுக்குடா இதெல்லாம் பேசிட்டு இருக்காரு?

Mannar & company™????

கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் புத்திசாலித்தனமாக இருக்க முடியாது, ஏனென்றால் உண்மையான அன்புக்கு ஒரு முட்டாள் கண்டிப்பாகத் தேவை!

அம்மு

இன்னைக்கு தான் டெஸ்ட் மேட்ச் கடைசி நாள் மாமா.. மூணு ரிசல்ட்டுக்கும் வாய்ப்பு இருக்கு..

இந்தியா வெற்றி, தோல்வி, டிரா மூணு ரிசல்டா மாப்ள..?

வெற்றி, டிராவா..? தோல்வி, படு தோல்வி, படு கேவலமான தோல்வின்னு மூணு ரிசல்ட் மாமா..

Mannar & company™????

என் பையன் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறான்னு நினைக்கிறேன்யா!

எதை வச்சி அப்படி சொல்றீங்க தலைவரே?

பனையூர்ல பெரிய வீடு ஒண்ணு வாங்கியிருக்கான் அதை வச்சுதான் சொல்றேன்!

அருண்

ரோஹித், கோலி – இந்த ரெண்டு பேரும் கிரிக்கெட்ல இருந்து ரிடையர் ஆகுற வரை செருப்பு போட்டுட்டு டீவி பார்க்க மாட்டேன்..

இது சவுக்கடி சித்தர் ஆட்டுக்குட்டி மேல சத்தியம் ????

கலா

ரூபாய் நோட்டில் எதையோ எழுதி கோயில் உண்டியலில் போடுறியே அப்படி என்னம்மா அதில் எழுதியிருக்கீங்க?!

“என் மாமியார் சீக்கிரம் சாகணும்”னு எழுதி இருக்கேன்.

ஏன்மா.. கடவுள் என்ன கூலிப்படையா வச்சிருக்காரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு அமித் ஷா போட்ட ஒன்லைன் ஆர்டர்! அதிமுகவை பாராட்டிய பின்னணி!

லேசர் வெளிச்சத்தில் மின்னும் வள்ளுவர் சிலை… கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

”சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன்” : நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share