இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப, பக்கத்துல இருந்த ஒருத்தர்… ’இவ்ளோ வெள்ளம் போயிட்டு இருக்கு.. இந்த விஜய் வெள்ளத்துல பாதிக்கப்பட்ட மக்கள பனையூருக்கு கூப்பிட்டு அரிசி, டிரெஸ்ஸு, மளிகை சாமான்லா கொடுத்துருக்காறாம்.
மக்களை ஏன் இப்படி கஷ்டபடுத்தனும்? வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு நேர்ல போய் எதும் செய்யலாம்ல’னு புலம்பிட்டு இருந்தாரு…
அவர்ட்ட, ’ப்ரோ எங்க இருந்து வார்ற’னு திருப்பி கேட்டேன், ’தலைவர் மகன் பிறந்தநாளுக்கு உதயவிழா கொண்டாடிட்டு நேரா இங்கதான் வார்றேன்’னு சொன்னாரு…
’அடப்பாவி மக்கள் அங்க அவ்ளோ கஷ்டப்படும் போது இங்க இப்படி ஒரு விழா தேவையானு ஏன் கேக்கவே தோணல?’னு அவன்ட்ட கேட்டேன்.. பதில் சொல்லாமயே கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
தமிழ்நாட்டில் நான் இந்தி கற்றுக்கொள்ளச் செல்லும்போது என்னை கிண்டல் செய்தார்கள் – நிர்மலா சீதாராமன்
இப்ப கூடத்தான் நிதி அமைச்சகத்தை சரியா கையாளவில்லை ன்னு கிண்டல் செய்யுறாங்க. அதுக்காக கோபப்பட்டு ராஜினாமாவா செய்ய போறீங்க ????
laavanya
தவெக கட்சி தலைவருக்கு அரசியல் தெரியாதுனு சொன்னாங்க ஆனால் தலைவன் எப்படி புரட்சி பண்றாரு பாத்தீங்கல
புரட்சியா.. அப்படி என்னடா பண்ணாரு?
அரசியலையே work from home’னு பண்றாருல…
ArulrajArun
பல சில்லறை பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து வைக்கிறது – G Pay PhonePe Paytm
raajmahaan
கொடுக்குற தெய்வம், கூரையை பிச்சிக்கிட்டும் கொடுக்கும்… – பழமொழி
கொடுக்குற தெய்வம், பனையூருக்கே வரவழைத்தும் கொடுக்கும் ~ புதுமொழி
▶படிக்காதவன்™✍
வீட்ல வேலை செய்ற இடத்துல ரோட்ல போகும்போது வரும்போது’னு எல்லா இடத்திலுமே “அட்ஜெஸ்ட்மென்ட்’ங்கிற ஒண்ணு மட்டும்தான் நம்ம வாழ்க்கையை கடத்திப்போகுது…
butterfly.
மருத்துவமனையில பிழைக்கவே மாட்டானு நினைக்கிறவன் திடீர்னு பிழைச்சு வாறதோ எப்பிடி மெடிக்கல் மிராகிளோ, அதே மாதிரிதான் வாழ்க்கையும்,
இவனானு நினச்சவங்க முன்னாடி இவரானு வளர்ந்து வருவது மெடிக்கல் மிராகிள்
ச ப் பா ணி
எந்த பொருள் கீழே விழுந்தாலும், “என்னாச்சு”னு கேட்கிற பழக்கத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது ‘தமிழர்களே’
லாக் ஆஃப்
வீட்டை இழந்து கையில் குழந்தையுடன் தவித்த தாய் : ஆறுதல் சொன்ன அமைச்சர்!
இடைத்தேர்தல் போல வெள்ள நிவாரண பணி: திமுகவோடு மீண்டும் உரசும் ஆதவ் அர்ஜுனா
சிபில் ஸ்கோரில் வெளிப்படைத்தன்மை இல்லை : கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!