அரசியல்லாம் வீட்டுல எடுபடாது போல : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு வீட்டுல இருக்கும்போது, என் பையன் வந்து ‘அப்பா, நீ ஒருவேல கூட செய்ய மாட்டேங்க’னு அம்மா குற சொல்லிட்டு இருக்குறா’னு சொன்னான்.

அதுக்கு நான், “உங்க அம்மாவுக்கு வேற வேல எதும் இல்ல… தெனமும் ஏதாச்சும் குத்தம் சொல்லிட்டு இருப்பான்னு ஸ்டாலின் மாதிரி ஒரு ஃப்ளோல சொல்லி பாத்தேன்.

எங்க இருந்து இத கேட்டாளோ தெர்ல.. வீட்டம்மா வீசுன பாத்திரம் கரெக்டா வந்து தலையிலயே விழுந்துருச்சு. இப்போ வீங்கி கெடக்கு..

நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

vasantha

ஒருத்தனை ஏமாத்தனும்னா கோயமுத்தூர் போகனும்..

சார் எந்த ஊரு..?

சென்னை புரோ

அவங்களாவது குடுத்த காசுக்கு ஈவன்ட் நடந்த ஹாலுக்கு உள்ள போனாங்க.. ரஹ்மான் கான்சர்ட் நடந்த ஸ்டேஜுக்கு போக விடாம ரெண்டு கிலோ மீட்டர் முன்னாலயே நிறுத்திட்டாங்கன்னு மூக்கை சிந்துன ஏமாளி பயலுவ தானேடா நீங்க..?

✒️Writer SJB✒️

இப்படி மழை அடித்தால்

இப்படி குளிர் அடித்தால்

நான் எத்தனை வாட்டி டா
ரெஸ்ட் ரூம் போறது..?

சரவணன். ????

ஒருத்தனை ஏமாத்தணும்னா..

~ அவன் ஆசையை தூண்டனுமா?

அதான் இல்ல.. கோயம்புத்தூர் போகணும்..!

கலா

Lucky Baskhar படம் பாத்துட்டு நாமளும் எதாவது bank ல Scam பண்ணி பணக்காரனாகனும் னு தோனுச்சு..

அப்றம்…?

அப்றம் தான் நம்ம வாழ்க்கைல ல தா மீனாக்க்ஷி மாதிரி பொண்ணே இல்லையே அப்புறம் எதுக்குன்னு விட்டுட்டேன்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இந்த கொங்கு உணவு திருவிழா ஸ்கேம்

இன்ஸ்டா food ரிவியூவர்ஸு ~ நாம அப்படியே அமைதியா போயிருவோம்

✒️Writer SJB✒️

வீட்டுக்கு வெளியே வந்து பாரு கப்பல் மாதிரி என் கார் நிக்குது,,

90ஸ் கிட்:- நீ என் வீட்டுக்கு வெளியே வந்து பாருடா
நாலு கப்பலே மிதக்குது,,

மழை டா????

கிரீஸ் டப்பா

புயல் கரையை கடந்துருச்சுன்னு எல்லாரும் நிம்மதியா இருக்கும் போது நீ மட்டும் ஏம்ப்பா சோகமா இருக்க..?

ரிப்போர்ட்டர் : இன்னைக்கு பீச்சுல போயி நாலு குடையாவது கிழிச்சா தான் டீ குடிக்கவாது காசு கிடைக்கும்..

கடைநிலை ஊழியன்

ஆமா.. 800 ரூபாய்க்கு 400+ food varieties தரோம் னு சொன்னா எப்படி நம்புறீங்க..

கோவையன்ஸ் – நாங்க எது சொன்னாலும் நம்புவோம்.. basic க்கா நாங்க ரொம்ப நல்லவங்க..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேய்யென பெய்யும் ஃபெஞ்சல் : நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா?

இரண்டு வீடுகள் மீது சரிந்த பாறைகள்! – மாயமான 7 பேர் கதி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel