இன்னைக்கு டீக்கடைக்கு போனா நண்பர் சோகமா உக்காந்து டீ குடிச்சிட்டு இருந்தாரு…
ஏன் என்னாச்சுன்னு நானும் டீ குடிச்சிக்கிட்டே கேட்டேன். அதுக்கு அவரு… ஒலிம்பிக் பதக்க பட்டியல்ல தங்கம் வாங்கிய பாகிஸ்தான் நம்மள விட மேல போய்ரும்னு சொல்லி வருத்தப்பட்டாரு…
அடப்பாவி.. தங்கம் ஜெயிக்க வேண்டிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் ஆகி வெள்ளிக்கு போராடிட்டு இருக்காங்க… அதுக்கு வருதப்படல… ஆனா பாகிஸ்தான் தங்கம் வாங்கி முன்னேறி போகுறத பாத்து உனக்கு சோகமா இருக்குன்னா… அப்படியே இருன்னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ஜோக்கர் ஃபீனிக்ஸ்
ஒரு நாட்டோட வீரர் தகுதியிழப்புக்கு அந்த நாட்டின் பிரதமரே காரணமாக இருக்கலாமோன்னு சொந்த நாட்டு மக்களே சந்தேகப்படுற கேவலம் உலகுல வேறெங்காவது நடக்குமாடா ?
செல்வேந்திரன்
எழுத்துப்பிழைகள்… சாதத்தில் முடி கிடப்பது போல.
அதற்காக ஒருவன் காலம் முழுக்க சாதத்தில் முடியை மட்டுமே தேடிக்கொண்டிருத்தல் சரியல்ல.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தினமும் காலைல எந்திரிச்சதும் இன்னைக்கு லட்சியம்னு மனசுல சில விஷயங்களை ஏத்திக்குவேன், அதுல சிலது:
ஹோட்டல்ல சாப்பிட கூடாது
உடற்பயிற்சி செய்யனும்
மனநிலையை பாசிடிவாக வைச்சுக்கனும்..
சரி லட்சியத்த நிறைவேத்துவியா..
அதான் இல்ல… லட்சியம் எல்லாம் மசங்கி போயி… மதியானாம் 2 மணிக்கே வாய பொளந்துட்டு தூங்கிருவேன்.
பாக்டீரியா
தனிமை புடிக்கும், தனிமை விரும்பினு சொல்றவங்க கிட்ட…
“Phone, TV, Laptop” nu எல்லாத்தையும் புடிங்கிட்டு உட்ரனும்.
பாலு
வினேஷ் போகத் தகுதி நீக்கத்த வச்சி ஒரு பழமொழி சொல்லுங்க
# பணம் பாதாளம் வரை பாயும்,
அதிகார வர்க்கம் உடன் சேர்ந்தால் பாரிஸ் வரை கூட பாயும்.
பர்வீன் யூனுஸ்
ஒரு படத்தோட ரிசல்ட்டை அது ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதில் இடம் பெறும் பாடல் வரி மூலம் சொல்லிய ஒரே படம் ‘இந்தியன் -2’
# தாத்தா வராரு.. கதற விட போறாரு.
லாக் ஆஃப்
ஆம்ஸ்ட்ராங் கொலை… பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜிடம் 7 மணி நேர விசாரணை! நடந்தது என்ன?
‘கனா காணும் காலங்கள்’ சீசன் 3 : விரைவில் ஓடிடி வெளியீடு!