நேத்து சென்னைல பேசின அமைச்சர் தா.மோ.அன்பரசன், ”தங்களுக்கு கூட்டம் கூடினால் நாமும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அறிவு இருக்காது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு போய்விட்டது. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது கனவு எடுபடாது”னு பேசிருக்காரு.
அதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் ‘உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் மகிழ்ச்சி’னு சொல்லிருந்தாரு…
எனக்கு என்ன ட்வுட்டுன்னா, மாமன்னன் படத்துல நடிச்சது யாரு என்கிறது தான்?
யோசிச்சிட்டு அப்படியே நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
இளநி
செபியே மார்க்கெட்ட மெனிப்ளேட் பண்ணி திருடிட்டுருக்கான்..இவனுக 35₹க்கு 10 ஷேர் வாங்கி வச்சிட்டு 30 வருஷத்துக்கப்புறம் 20% லாபம் வருமானு கால்குலேட்டர தட்டிட்ருகானுக..இதுல ட்ரேடிங் கத்துகுடுக்றேன் 4000காசோட டெலிக்ராமுக்கு வானு நாலு அட்வைசருக வேற.
Mannar & company™????
ஆண்கள் சுதந்திரமாக இருப்பதுபோல ஒரு மாயை இருக்கு,
அதேபோலதான் பெண்களு(க்கு)ம் சுதந்திரமாக இல்லாததுபோல ஒரு மாயை இருக்கு!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நம்ம பண்ணிகிட்டது ஷேவிங்தான்னாலும்
சலூன்கார் திடீர்னு நம்ம கையில சீப்பை எடுத்து தந்தார்னா,
ஷேவிங் முடிஞ்சுது இடத்தை காலி பண்ணுன்னு சொல்றார்னு அர்த்தம்.
???????????? ™
90’s kid ~ நாங்கலாம் Schoolல அடிச்சாங்கனா வீட்ல சொல்ல மாட்டோம்
2k kid ~ ஏன் சொல்ல மாட்டிங்க?
90’s kid ~ Teacher அடிக்கிற மாதிரி நீ என்ன தப்பு பண்ணுனனு கேட்டு அவங்களும் அடிப்பாங்க
black cat
நல்லா வேல #Indian2 OTT ல வந்துச்சு
இல்லன்னா கவுண்டம்பாளையத்த கவுத்து போட்டு அடிச்சு கதறவிட்டுருப்பாங்க
கடவுள்
மாப்ள.. netflix subscription வேணுமா மாப்ள..
எதுக்கு.. உனக்கு தலைவலி வந்தது பத்தாது னு.. எனக்கும் வரணுமா.. போவியா அங்கிட்டு..
நிஷா
இந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டும் தூங்க கூடாது போல.
தூங்கி எந்திரிச்சதும், ஆபீஸ் கிளம்பனும் ‘ங்கிற பயம் ஒரு நிமிஷம் கண்ணு முன்னாடி வந்து போகுது !!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
”நடுவரே சமரசம் ஆகிவிட்டார்” : செபி தலைவரை ராஜினாமா கோரும் ராகுல்
”வங்கதேசத்தில் ஆட்சிக் கலைப்புக்கு காரணம் அமெரிக்காவின் சதி” : ஷேக் ஷசீனா குற்றச்சாட்டு!