இன்னைக்கு ஆபிஸ் ல செம வேல… ஒரு வழியா முடிச்சி சாயங்காலம் டீ குடிக்க கெளம்பாலம்னு பாத்தா.. ஒருத்தனையும் காணோம்..
சரி நம்ம போவோம்னு போனா….
அங்க பக்கத்து சீட்டு பாக்யா.. பக்கத்து ஆபிஸ் டீம் கூட ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு இருக்கான்… அத பாத்துட்டு வந்துச்சி ஒரு கோவம்…
அவன தனியா கூப்புட்டு, “ஏன்டா இப்படி கூட்டணி கட்சிய விட்டுட்டு கவர்னர் டீ பார்ட்டிக்கு போன cm மாறி, நீயும் என்ன விட்டுட்டு டீ குடிக்க வந்துட்டியேடா”னு தான் கேட்டேன்…
உடனே எனக்கும் ஒரு ஹார்லிக்ஸ் சொல்லிட்டான். எப்படியோ மிஷன் சக்சஸ் ஆயிடுச்சி…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
Kirachand
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர்!
என்னப்பா திராவிட மாடல் அரசுக்கு வந்த சோதனை?
கடைநிலை ஊழியன்
சுதந்திரம் வாங்கி என்ன சார் பிரயோஜனம்..
சுதந்திர தினம் வியாழக்கிழமை வந்தா கூட வெள்ளிக்கிழமை லீவ் கேட்டா தர மாட்டிங்குறாங்க..
அட போயா… சுதந்திர தின அன்னைக்கே லீவு தர மாட்டேன்றாங்க
Jeni
·
சுதந்திரமா ஒரு பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வீட்டுக்கு வர முடியல
என்னத்தை independence day…. 🚶🏻♀️
#கொல்கத்தாபெண்மருத்துவர்கொலை
🄰🅃🄲 ™
ஆம்பளைய நம்பி ஏமாந்த பெண்கள விட …..
50% ஆடி தள்ளுபடில ஏமாந்த பெண்கள் தான் அதிகம்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் நம்ம கொண்டாடனும் மாமா..
சபாஷ் மாப்ள.. அப்படித்தான் ஒத்துமையா இருக்கனும்..
ஒத்துமையா..? ஒரு நாள் லீவு எக்ஸ்ட்ரா கிடைச்சுருக்குமேன்னு சொன்னேன் மாமா..
சரண்யா
ஒருத்தன் ஒரு விஷயத்தை யோசிக்காம, சந்தேகப்படாம செய்தால் 20 வயசு,
யோசித்து, சரியா வருமா என்று சந்தேகப்பட்டு செய்தால் 30 வயசு,
பல தடவை யோசித்து யோசித்து நிறைய சந்தேகப்பட்டு அந்த விஷயத்தை தள்ளி போட்டு கொண்டே சென்றால் வயது 40 என்று அறிக…… 🙄😏🏃♀️🏃♀️
கிட்டப்பா
யாராவது தன்னோட வாழ்ககையில தானே மண் அள்ளி போட்டுக்குவாங்களா சார்..?
நான் போடுவேன்.. அதுவும் ஒரு தடவை போட்டது சரியா மண் விழலன்னு வாராவாரம் புதுசு புதுசா நானே எதாவது ஏழரையை இழுத்து விட்டுக்குவேன்..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
‘சர்தார் – 2’ : நடிகை ரஜிஷா விஜயன் இணைகிறார்!
பட்டதாரியை தொழில் முனைவோராக்கும் முதல்வர் மருந்தகம்’ திட்டம் – முழு விவரம்!