இன்னைக்கு காலைல எந்திச்சி சூரியன பாத்து ஒரு கும்புடு போட்டு வழக்கமா போர டீக்கடைக்கு பதிலா நேரா பூத்-க்கு போயி ஓட்டு போட்டுட்டு வெளிய வந்தேன்.
அங்க நம்ம கடம்பன், கையில கரும்ப வச்சிகிட்டு சந்தோசமா நின்னான்.. என்ன ஓட்டு போட்டாச்சானு கேட்டதுக்கு…
அவன், “அண்ணே அங்க இருந்த 20 சின்னத்துல கரும்பு விவசாயி சின்னத்த ஓங்கி ஒரு குத்து குத்திட்டு வந்துட்டேன். இந்த தடவ தமிழ் பிள்ளைகள் தான் வெற்றி பெறுவோம்”னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தான்.
அடப்பாவிகளா அந்த மனுசன் தொண்ட கிழிய மைக்ல கூவி கூவி, ‘நமது சின்னம் ஒலிவாங்கி’னு கத்திட்டு இருந்தாரு.. இவன் என்னடான்னா கரும்பு விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டுட்டேனு காது கிழிய வேற கத்திட்டு போறான்.
இதுக்கெடையில ’இந்த நெலம் ஒருநாள் எங்கையில சிக்கும்’னு சொன்ன… அண்ணனோட வாய்ஸ் கேட்குது… கூடவே ’இப்படி இருந்தா எங்குட்டு சிக்கும்’னு மைண்ட் வாய்ஸும் கேக்குது..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Interview of Radhika 👌😂😂😂
ராதிகா: இப்போ மோடி தான் பிரதமர்
Reporter :-
மக்கள் சந்திச்சீங்க.. அவங்க என்ன மனநிலையில் இருக்காங்க?@realradikaa :-
மக்கள் மாற்றத்த எதிர்பார்க்குறாங்கReporter:
அப்போ #INDIA கூட்டணி தான் வெற்றி பெரும்னு சொல்றீங்களா?Radhika: ஙேஏஏ
😂😂😂 pic.twitter.com/LYHQ4TuUVC
— Surya Born To Win (@Surya_BornToWin) April 19, 2024
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“மத்திய சென்னை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வரை திமுக திட்டமிட்டு நீக்கியுள்ளது” – வினோஜ் பி செல்வம்
அப்படி மட்டும் பண்ணிருந்தா அது உங்களுக்கு தான் நல்லது.. தோக்க போற ஓட்டு வித்தியாசம் குறைஞ்சுதேன்னு சந்தோசப்படு!
சரண்யா
நெடுஞ்சாலைகளில் வாகன விபத்து நடக்கும் நேரம் காலை 4 மணி to 5 மணி,…????
தேர்தல் வாக்கு பதிவில் கள்ள ஓட்டு நடக்கும் நேரம் மாலை 5 மணி to 6 மணி,… ????????♀️????♀️
கடைநிலை ஊழியன்
ஒரு லட்சம் பேர் லிஸ்ட் ல இல்ல – அண்ணாமலை #
ஆமா லிஸ்ட்’ட செக் பண்ணாம இவ்ளோ நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. ~ மக்கள்
ஏப்ரல் 19 வரட்டும் னு வெய்ட் பண்ணிட்டு இருந்தோம்.. இப்ப என்ன அதுக்கு ~ அண்ணாமலை #
சொல்லக்கூடாதாம் ⭐
தட் பாய் ~ நம்ம ஒரு காலத்துல ரூட்டு விட்டு சுத்துனது எல்லாம் இப்போ அவ உயரத்துக்கு ஒரு புள்ளைய பின்னாடி வண்டியில வச்சு கூப்பிட்டு போறாளுக. இவளுக வேகமா கல்யாணம் பண்ணி புள்ள பெத்துட்டு நமக்கு வயசான feel தராளுக. இதுக்குதான் சொந்த ஊர் பக்கம் போகவே கூடாது.
James Stanly
திருமண கோலத்தில் வாக்குசாவடியில்னு ஒரு செய்தி கூட வரல..
நெஜமாவே இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்..
Sasikumar J
டாஸ்மாக் கடையை அடைக்கனும்னா
அடிக்கடி தேர்தல் தான் வரணும் போல
அப்படித்தான் இருக்கு நிலைமை…!
ச ப் பா ணி
காத்து வருதோ இல்லையோ
காத்து வர்ற மாதிரி சத்தம் மட்டும் வருது
#கோடைகால மின்விசிறி
Kirachand
இந்த தேர்தலில் பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை! – ஓபிஎஸ்
ஆமாமா …உங்களை எதிர்த்து எத்தனை ஓபிஎஸ் போட்டியிட்டாலும்
அதுல உங்க சோக முகம் ‘பளிச்’சினு தெரியும்னு சொல்லுங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
புதுச்சேரியில் சிக்கிய ரூ.4.9 கோடி பணம் : காப்பாற்ற முயன்ற அதிகாரி… காட்டி கொடுத்த நாய்கள்!