தாமரைனு தான் சொன்னேன்… சோலி முடிஞ்சி! : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

டீக்கடைக்கு தீஞ்சி போன தீக்குச்சி மாறி வந்து உக்காந்த பிரபு கிட்ட, ”என்ன பிரபு.. ஏன் சோகமா இருக்க..?”னு கேட்டேன்.

அதுக்கு அவன், “என் வைஃப் எனக்கு கால் பண்ணா… அப்போ இந்த அண்ணாமலை சொன்னாரேனு ‘ஹலோ தாமரை வணக்கம்’னு பதில் சொன்னேன்..

’என் சக்களத்தி பேரு தாமரையா?’னு திட்டிட்டு, ’இனிமே உன் கூட வாழ மாட்டேன்’னு சொல்லிட்டு அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா”னு அழுவுறான்…

அந்த நேரம் பாத்து ‘தாமர பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டயே வந்ததில்ல’னு என்னோட மொபைல் ரிங்டோன் கேட்க… பயபுள்ள கடுப்பாகி கிளம்பிட்டான்…

பாவம்…  பெருசா பாதிக்கப்பட்டுருக்கான் போல!

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

நெல்லை அண்ணாச்சி

பாஜகவின் 76 பக்க தேர்தல் அறிக்கையில்
மோடிஜியின் 53 படங்கள்.

கோழியின் கிறுக்கல்!!

ஒருசில சமயங்களில் விடாமல் பிடித்திருப்பதும்,

போராட்டத்தில் தான் சேரும்!

பர்வீன் யூனுஸ்

மழையில் நனைந்தவாறு வைகோ பிரச்சாரம் #

‘தீப்பெட்டி’ நனைஞ்சி போயிருக்குமே

பர்வீன் யூனுஸ்

ரூ 1000 கொடுத்துவிட்டு ஆயிரம் முறை சொல்வதா? – சீமான் #

பின்னே.. ரஜினி மாதிரி ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரின்னு சொல்ல சொல்றீங்களா?

கடைநிலை ஊழியன்

போ.. போ.. பாட்டு சுமாரா தான் இருக்கு..

எல்லாரும் போயி இன்னைக்கு #CSK க்கு விசில் போடு..

#WhistlePodu #TheGreatestOfAllTime

Writer SJB✒️

சோசியல் மீடியால 60 வயசு ஆயாவை கூட தோழி,க்ரஷ்னு கூப்பிடுற பசங்க எங்கே..

30 வயசு பையனை கூட அங்கிள்னு கூப்பிடுற பொண்ணுங்க எங்கே..?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

CSKvsMI : தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்… இமாலய ஸ்கோரை செட் செய்த சென்னை!

”ஸ்டெர்லைட் ஆலைக்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக தான் ”: எடப்பாடி குற்றச்சாட்டு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *