ரோடு ஷோக்கு இத பண்ணலாமோ? : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

சாயங்கலாம் டீக்கடைக்கு போகும் போது, வழக்கமா ’பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ’ பத்தி ஜாலியா பேசிட்டு இருக்குற பீட்டரு… மோடி, அமித் ஷா போன ’ரோடு ஷோ’ பத்தி ரொம்ப பேசிட்டு இருந்தான்.

இத கேட்ட வடிவேலு ‘என்ன மோடி, அமித் ஷா, இன்னைக்கு கோவைல நிர்மலா ஜி போன ரோடு ஷோ பாருங்க… யாருமே கண்டுக்கலனாலும், 360 டிகிரில சும்மா சுத்தி சுத்தி வணக்கம் போட்டுக்கிட்டே போனாங்க.. அதான் கெத்துனு சவுண்டு விட்டான்..

இத கேட்ட டீக்கடக்காரரு… ‘தம்பிகளா… ரோடு ஷோ லாம் இருக்கடும்… இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த இடம் டிராபிக் ஜாம் ஆகிரும்.. அதுக்குள்ள கிளம்பி போங்கனு சண்டைய கலைச்சி விட்டுட்டாரு..

அதுவும் சரிதான்… இந்த தலைவருங்க, எல்லாத்தையும் விலக்கிவிட்டு நடுவுல ஒய்யாரமா போகுறதுக்கு பதிலா, ஒருநாள் டிராபிக் ஜாம்ல மக்களோட மக்களா வந்தாங்கனா… மக்களோட வலியும் புரியும்…. மக்களுக்கு ஈசியா போகுறா மாறி புது வழியும் பொறக்கும்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கோழியின் கிறுக்கல்!!

வெயில் நேர பேருந்து பயணத்தில் ராஜா பாட்டானாலும்,

கேட்க கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கின்றது!

mohanram.ko

ஜி – அடுத்த ரோடு ஷோ நடக்கும் போது, டிவைடரை க்ராஸ் பண்ணி போய்,

அரை கிலோ அல்வா வாங்கிட்டு வந்தா  ஓட்டு போடுவாங்களா?

ச ப் பா ணி

கடைசி வரை “பூத் ஏஜென்டாகவே” இருந்து இறந்து போகிறார்கள்

”அடிமட்டத் தொண்டர்கள்”

கடைநிலை ஊழியன்

தென் தமிழக மக்கள் – ஊரே ஒரே பனிமூட்டமா, குளு குளு னு இருக்கு..

வட தமிழக மக்கள் – இங்க பங்குனி வெயில் பல்ல காட்டிட்டு அடிச்சுட்டு இருக்கு.. போவியா.

balebalu

“ஜப்பான் ல்ல ஜாக்கிசான் கூப்ட்டாக” என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்

15 சீட்டும் 1000 கோடி ரூபாயும்

balebalu

நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், ஹெல்மெட் அணியாமல் மனைவிக்கு ஆதரவாக சரத்குமார் பைக் பயணம் – செய்தி

சூரிய வம்சம் படம் மாதிரி இதுவும் ஒரு ஷூட்டிங் ன்னு நினைச்சிட்டாரு  போல

பர்வீன் யூனுஸ்

ஜனநாயகம் இருக்கும்போது தான், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் – கார்த்தி சிதம்பரம்

# நெட்ப்ளிக்ஸ் கனெக்சன் இருக்குறதால தான் உங்களால சீரீஸ் பாக்க முடியுதே.. அது மாதிரியா

Image

ரஹீம் கஸ்ஸாலி

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து -மோடி #

இவங்களே வைப்பாங்களாம். இவங்களே எடுப்பாங்களாம் மோமண்ட்.

Image

எனக்கொரு டவுட்டு!?
அடுத்த முறை விவாத மேடை நடந்தா சேர் யூஸ் பண்ண வேணாம் என கோரிக்கை வைக்கறேன்
யாரு நீங்க, பொது மக்களா?
சேரு டேபிள் வாடகைக்கு விடுற பர்னிச்சர் கடைகாரன்ங்க..
Image

Kirachand

தேர்தலுக்கு பிறகு அதிமுக உண்மையான தலைவர் கைகளுக்கு வரும்! – அண்ணாமலை

உண்மையான தொண்டர் கைகளுக்கு வருமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

”2026 தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி” : ஒவைசி சொன்ன காரணம் தெரியுமா?

டிஜிட்டல் திண்ணை: வாக்குக்கு பணம்… ஸ்டாலின் உத்தரவு – டென்ஷனில் அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel