அமித் ஷாவும்… அடுத்த தேர்தலும்… : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

’பிரச்சாரத்துல ஸ்டாலின், கார்கே, திருமாவளவன், வைகோ எல்லோரும் மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்தா இந்தியாவுல இனி தேர்தலே நடக்காதுனு சொல்லிட்டு இருக்காங்க’னு ப்ரெண்டு ரொம்ப நாளா எண்ட சொல்லிட்டு இருந்தான்

ஆனா இன்னைக்கு மதுரைக்கு வந்த அமித் ஷா ‘அடுத்த தேர்தலில் தூய தமிழில் உங்களோடு பேசுவேன்’னு சொன்னாரு.

இத கேட்டுட்டு என் பிரண்டுகிட்ட போயி ‘நீ என்னமோ சொன்ன… இங்க பாரு அமித் ஷா அடுத்த தேர்தல பத்தி பேசிருக்காரு’னு சொன்னேன்

அதுக்கு அவன்… “டேய் அவர் அப்படி சொல்ல வரல… ‘நான் தூய தமிழ பேசுற வரைக்கும் உங்களுக்கு எலெக்சனே கெடையாது’ங்கிறத தான் அப்படி சொல்றாரு”னு சொன்னான்…

ஒரு வேள இருக்குமோ!

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு…” – அனுராதா டிடிவி தினகரன்

# இதை பார்த்தா தேர்தல் பிரச்சாரம் மாதிரி தெரிலயே..

SELVA KUMAR MULANUR

சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சி சாப்பிடாதீர்கள்: காடி

சரி சாப்படல…. அதேமாதிரி நீ்ங்க சாணி சாப்பிடாம இருங்க 🤪

கிரீஸ் டப்பா

“15 சீட்டும், ₹1,000 கோடியும் தருவதாக கூட்டணிக்கு கூப்பிட்டாங்க. ஆனால் நான் போகல..!” -சீமான்

ஏன்..?

அதுக்குள்ள ‘பத்து மணி வரைக்கும் என்ன தூக்கம் வேண்டி கிடக்குன்னு..’ என் பொண்டாட்டி என் மூஞ்சில தண்ணியை ஊத்தி எழுப்பிட்டா..

நெல்லை அண்ணாச்சி

அமித்ஷா, நிர்மலா சீதாராமன்,…Road Show…

# பதற்றத்தில் பாஜகவின் “கூட்டணி” கட்சிகள்..!!

balebalu
என்ன பெரிய அரசியல் ரோடு ஷோ

ATM வாசலில் இருந்து ரோடு வரை

ஏற்கனவே நடந்த “மக்கள் ரோடு ஷோ” தெரியுமா?

ச ப் பா ணி

நீ எதனையும் தேடிப் போகாதே,

உனக்குத் தகுதி இருந்தால் அதுவே உன்னை தேடி வரும்

-ஆப்பு

Image

குருநாதா

பிரியாணி தான் அனுப்பல

பிரியாணி ரெசிப்பியாச்சும் அனுப்புவிங்களா பாய்…

Image

கோழியின் கிறுக்கல்!!

மழைக்காலத்தில் மழை குடைகளாக,

வெயில் காலத்தில் நிழற்குடைகளாக,

பாலங்கள்!!

Image

பாக்டீரியா

இந்த சீசன்ல RCB கப் அடிக்க ஒரு யோசனை சொல்றேன்..

~ என்ன யோசனை..?

கப் அடிக்கிற டீமுக்கு RCB’ன்னு பேர் வச்சு வுட்ரு..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

“உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்” : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

“ஸ்டாலினை தவிர வேறு யாரையும் சகோதரர் என அழைத்ததில்லை” : ராகுல் காந்தி

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *