பிளஸ் ஆனா உப்பு தான் போல : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போனப்ப, விஜய் ரசிகர் ஒருத்தர்… ’2026 தேர்தலில் திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில சர்க்கரை போடுவேனு நடிகை கஸ்தூரி சொல்லிருக்கு’னு சந்தோசமா தெரிவிச்சிட்டு இருந்தாரு.

இத கேட்டதும், ‘அப்போ திமுக கூட்டணி கணக்கு பிளஸ் ஆச்சுனா, விஜய் வாயில கஸ்தூரி உப்பு அள்ளி போடுவாங்களோ’னு நா திருப்பி கேட்டேன்.

பதில் சொல்லாமயே கடுப்புல கெளம்பிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வருடம் வருடம் நம்மிடம் ஏறிக் கொண்டே போவது நம் வயது மட்டும்தான் மற்றவை அப்படியேதான் இருக்கு …!

Black cat

நானும் Lucky Bhaskar மாதிரி தா.

எப்டி டா?

வீட்டுல என்ன திட்டுனாங்கன்னா ஒரு அரைமணி நேரத்தில அத மறந்துட்டு ரசத்த ஊத்து moment கு போயிடுவேன்.

கடைநிலை ஊழியன்

என்ன தான் ஸ்கூல் முடிச்சு பல வருஷம் ஆனாலும், திங்கட்கிழமை ஆபீஸ்’க்கு போறது, ஏதோ ஹோம் ஒர்க் எழுதாம ஸ்கூல் ‘க்கு போற மாதிரி பயமா தான் இருக்கு !!

Suyanalavaathi

“சொல்வதை செய்வோம்” னு சொன்னாலும் சரி, “செய்வதை சொல்வோம்” னு சொன்னாலும் சரி, ரெண்டுக்கும் முக்கியமான ஒன்னே ஒன்னு தான், செய்யணும் !!

✒️Writer SJB✒️
“விஜய்க்கு அரசியலின் அடிப்படை புரிதல் தேவை ~ அண்ணாமலை

இவர் படித்த லண்டன் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆள் பிடிக்கிறார்… நிறைய கமிஷன் கொடுக்கிறேன் என்று சொல்லி இருப்பாங்களோ? ~ மக்கள்

SBalan
நீங்கள் அறிவாளியாக இருந்தால் முட்டாளாக காட்டிக் கொள்ளுங்கள் நிறைய ஃபாலோயர்ஸ் கிடைப்பார்கள்,,

நீங்கள் முட்டாளாக இருந்தால் அறிவாளி மாதிரி காட்டிக் கொள்ளுங்கள் பாஜகவில் பதவி தருவார்கள்..! ~ அப்படியா?

இராதாகிருஷ்ணன்

உலகத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கச் சொல்லிப் பறக்கிறது ஒரு பறவை.

மனதை மாற்றிக் கொள்ளலாம் என நடந்து போகையில் சாலையில் அடிபட்டு செத்துக் கிடக்கிறது புறா ஒன்று.

பறந்த பறவை கண்ணில் தென்படவே இல்லை.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”நூல் வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான் தான்” : திருமாவளவன்

ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்

திமுகவை வீழ்த்த இது தான் வழி… கஸ்தூரி சொன்ன ’அடே’ ஐடியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel