மன்னராட்சியா? மக்களாட்சியா? : அப்டேட் குமாரு
இன்னைக்கு டீக்கடைக்கு போறேன், அங்க ஒரு சின்ன பையன கூப்பிட்டு ’தமிழகத்துல நடக்குறது மக்களாட்சியா? மன்னராட்சியா?’னு ஒருத்தரு கேட்டுட்டு இருந்தாரு.
அவனுக்கு என்ன கேக்குறாங்கனும் புரியல… ஏன் இத கேக்குறாங்கனும் புரியல போல…
கேள்வி கேட்டவனயே உத்து பாத்தவன், ’அண்ணே நீங்க என்ன கேக்கிறீங்கனு தெரில… நா வீட்டுக்கு ஆச்சி மிளகா தூள் வாங்க வந்தேன். இப்படி ஸ்கூல வாத்தியார் கேள்வி கேட்டார்னுதான் அவரு மண்டைல கல்ல எறிஞ்சிட்டு ஓடி வந்துட்டேன்’னு சொன்னதும்,
அங்க இருந்தவன்… இவன இதுக்கு மேல பிடிச்சிட்டு இருந்தா, நம்ம மண்டைய ஒடச்சிருவானு உட்டுட்டான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
Sasikumar J
பாஜகவில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்
ஏன் திமிங்கலம் இந்திய ஜனநாயக கட்சி எதுல இருக்கு பிஜேபியில இருக்கு அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருக்கலாம்..!
mohanram.ko
முதல்ல ப்ரீ கேஜி னு ஒண்ணு படிக்கணும், உன் வயசுல ஒரு பாட்டி உன்னை மடியில வச்சி சோறூட்டும்.. அப்புறம் எல்கேஜி, யூகேஜி னு 12 வருஷம் ஸ்கூல்ல படிக்கணும், அப்புறம் காலேஜ் படிச்சிட்டு போட்டி தேர்வுல பாஸ் ஆனாதான் ஐபிஎஸ் ஆக முடியும். அதெப்படி After all ஐபிஎஸ் னு சொல்லிட்டாரு….
Mannar & company™????
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
பின்னே என்னப்பா..
மனசு கஷ்டமாருக்குன்னு கவலையை சொன்னால் அதை எழுதி அப்படியே வாட்ஸ்அப்பில் ஸ்டேட்ஸா வைங்க 24 மணி நேரத்தில் காணாமல் போகும்னு சொல்றான்பா!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கேள்வி எளிதாக இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தால், பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
ச ப் பா ணி
பள்ளிப் படிப்பு வரை தான் வீடு. அதற்குப் பின் மேற்படிப்பு, வேலை எல்லாம் கிடைத்தவுடன் Guest house ஆகிவிடுகிறது வீடு
Mr. வெட்டி
மீ : உலகத்துல நாம போதும்னு சொல்ல முடியற ஒரே விசயம் சோறுதான்.
மை மைன்ட் வாய்ஸ் : அடுத்த இரண்டு மணி நேரத்துலயே வேணும்னு நீ திரும்ப கேட்கப் போற ஒரே விசயமும் #சோறுதான்
✒️Writer SJB✒️
அன்று காடுகளில் வாழ்ந்த மனிதன்
இன்று சிம்கார்டு ஏடிஎம் கார்டு டெபிட் கார்டு மெமரி கார்டு பான் கார்டு ஹெல்த் கார்டு என கார்டுகளில் வாழ்கிறான்..!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி
”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!