அது போன வருஷம்… இது இந்த வருஷம்… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

போனவருஷம் எங்க ஊரு தூத்துக்குடி, திருநெல்வேலில பெஞ்ச மழையால கிராமங்கள் எல்லாம் துண்டாகி, உணவு, உடை வீடு எல்லாம் போயி மக்கள் ரொம்ப கஷ்டம் பட்டாங்க.. ஆனா வெள்ளத்த பார்வையிட வந்த நிதி அமைச்சர் நிர்மலா, ‘நகி பேட்டா’னு சொல்லிட்டு போயிட்டாங்க….

ஆனா இந்த வருஷம் விழுப்புரம், திருவண்ணாமலை கனமழையால பாதிக்கப்பட்ட நெலமையில… கேட்ட ரெண்டாயிரத்துல… ஆயிரம் கோடிய தந்திருக்கு மத்திய அரசு…

இதப்பத்தி… விழுப்புரத்துல இருக்குற நண்பர்ட போன் போட்டு கேட்டா… ’அது போன வருஷம்… இது இந்த வருஷம்’னு வடிவேலு மாதிரி பதில் சொல்லிட்டு சிரிக்குறான்.

என்னவோ… இப்போவாச்சு கொடுத்தாங்களே…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க
mohanram.ko
பேசி பேசி, ‘வழி’க்கு வரவச்சிடறாரு, டிராபிக் பூத் கான்ஸ்டபிள்

balebalu
இன்போசிஸ் நாராயண மூர்த்தி சொல்வது போல்
20 மணி நேரம் ஓயாமல் உழைக்கிறது
நாக்கும் வயிறும்

ArulrajArun
எந்த கட்சியும் நல்ல கட்சி தான் புதிதாக ஆரம்பிக்கையிலே , அந்த கட்சி மக்களுக்கு நல்லது செய்வதும் தீயவராவதும் மீடியா வளர்ப்பினிலே

Sasikumar J
~ போன வருஷம் இந்நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க…!
~ சென்னை வெள்ளத்துல பிரெட், ஜாமூன் சாப்பிட்டுகிட்டு வீட்டுக்குள்ளே இருந்தேன்..!

நெல்லை அண்ணாச்சி
GST வசூல் என்னுடையது….
நிவாரணம் செலவு உன்னுடையது
-மத்திய அரசு

ச ப் பா ணி
கனவுகளின் எக்ஸ்பயரி நேரத்தை அலாரமே தீர்மானிக்கிறது.

Mannar & company™????
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
பின்னே என்னப்பா..
மனசு கஷ்டமாருக்குன்னு கவலையை சொன்னால் அதை எழுதி அப்படியே வாட்ஸ்அப்பில் ஸ்டேட்ஸா வைங்க 24 மணி நேரத்தில் காணாமல் போகும்னு சொல்றான்பா!

மயக்குநன்
திமுக போல விருந்து போட்டு சாப்பிட்டுவிட்டு போகும் கூட்டம் அல்ல அதிமுக!- எடப்பாடி பழனிசாமி.
‘இலை’யையும் கிளியர் பண்ணிட்டுத்தான் போவோம்னு சொல்லுங்க..!

நெல்லை அண்ணாச்சி
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கையில் கட்டு கட்டாக ரூபாய்
நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது…!!!
-அவங்களே வைப்பாங்களாம்
அவங்களே எடுப்பாங்களாம்..!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே பின்பற்றலாமா?

டாப் 10 நியூஸ்: புத்தக வெளியீட்டு விழாவில் திருமா முதல் மத்தியக் குழு ஆய்வு வரை!

இறுமாப்பு 200… மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் : திமுக மீது விஜய் தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel