வெறுப்பேத்துறான் மை லார்ட் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போனா, “ப்ரோ.. நயன் தாராவோட கல்யாண வீடியோ இவ்ளோ சர்ச்சைக்கு பின்னாடி நாளைக்கு ரிலீஸ் ஆக போகுது.. பாக்குறதுக்கு ஆர்வமா இருக்கீங்களா ப்ரோ”னு கேட்டான்.

ஏற்கெனவே கேமிரா மேனுக்கு காசு கொடுத்துட்டு போட்டோ கூட கெடக்கமா இருக்குறேன். அவன் கேட்டதும் ரொம்ப பீல் ஆயிடுச்சி…

உடனே நான்.. ”டேய்.. என்னோட கல்யாண வீடியோ ‘வயே நா இன்னும் முழுசா பாக்கல டா ஏண்டா இப்படி வெறுப்பேத்துறனே”னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் குமாரு பாருங்க..

கடைநிலை ஊழியன்

மீ டூ மை அம்மா :

அவன் ஏன் இந்தன வருசமா ஒரே கம்பெனி ல இருக்கான் னு கேட்டா..

வேற வேல தேடல னு சொல்லு.. வேற வேல கடைக்கல னு சொல்லாத..

கணேசன்

முடிஞ்சா “கடைசி உலகப் போர்” படம் பாருங்க.. நல்லாருக்கு..

பின் குறிப்பு – கடைசி வர பாத்து முடிச்சீங்க னா, கதை என்ன னு சொல்லுங்க ப்ளீஸ்..

Suyan

எதுக்குப்பா அழுகுற.. ?

என்ன சுத்தி Schadenfreude ‘சா இருக்காங்க..

Black cat

கங்குவா டீம் – ஐயோ.. ஐயோ.. ஐயோ…

ரெண்டு நாளா create பண்ண Hype ஒரு லெட்டர்ல கெடுத்துட்டா…

எரியுதே…வயிறு எரியுதே.. நல்லா இருப்பாளா…

Mannar & company™????

என்னைல்லாம் கறிக்கடைக்கு அனுப்புறத்துக்காகவே பெத்துப் போட்ருக்காங்க சார்..

என்னப்பா வீட்ல கடைக்குட்டியா..!?

இல்லங்க நான் ஆட்டுக்குட்டி!


Sasikumar J

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒரு பெரிய வெற்றிவிழா நடக்குமான்னு தெரியாது; ஆனா நிச்சயம் ஒரு தோல்வி நடந்திருக்கும்…!

கிரீஸ் டப்பா

கே டிவி: அப்புறம் என்னப்பா..? நாளைக்கு சாயங்காலம் ‘நானும் ரவுடி தான்’ படம் இறக்கிறலாம் தானே..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்