இன்னைக்கு விராட்கோலி ரஞ்சில விளையாடுறத பத்தி டீக்கடைல பேசிட்டு இருந்தாங்க.
அப்போ ’ரோகித் சர்மாவுக்கு வந்த கூட்டத்த விட கோலிக்கு தான் அதிக பேன்ஸ் குவிஞ்சாங்க’னு கோலி ரசிகர் சொல்ல,
அங்க இருந்த ரோகித் ரசிகர், ’கூட்டம்லா ஒரு மேட்டரே இல்ல.. எவ்ளோ ஸ்கோர் அடிக்கிறாரு தான் மேட்டரு’னு பதிலுக்கு பவுசு காட்ட, இருதரப்பும் மாறி மல்லுக்கட்டுச்சு.
அப்போ, அங்க வந்த பெரியவரு, இன்னும் 2 நாள்ல பட்ஜெட் வாசிக்கும் அந்த நிர்மலம்மா, ஏற்கெனவே அரிசிக்கு ஜிஎஸ்டி எல்லாம் எகிறி சோத்துக்கே வேட்டு வச்சிடுச்சி, வேற என்ன பண்ண போகுதுனு தெரில, இவனுங்க என்னானா ஸ்கோரு, ஓவருனு பேசிட்டு இருக்கானுங்க’னு எறிஞ்சி விழ… பேன்ஸ் சண்ட சட்டுனு கப்சிப் ஆயிடுச்சி update kumaru memes and trolls 30
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls 30

Mannar & company™🕗
சின்னப் பிள்ளையாய் இருந்தப்ப பெரிய மனுஷன் மாதிரி பேசுறான் பாருன்னு பாராட்டினாங்க..
பெரியவன் ஆனதும் சின்னப்பிள்ளை மாதிரி பேசாதன்னு திட்றாங்க!
என்னத்த சொல்ல.

கோழியின் கிறுக்கல்!!
தெரு மளிகைக்கடைகாரர்,
நாளடைவில் குடும்பத்தில் ஒருவராக மாறி விடுகிறார்!!

சரண்யா
என்னது நாளைக்கு பட்ஜெட் துவக்கத்துக்கு அல்வா வுக்கு பதில் கோமியம் தராங்களா… 😏🙄🏃♀️🏃♀️🏃♀️

Sasikumar J
வீடுகளில் 7 மணிக்கு மேல தான் மிக்ஸியை அரைக்கணும்னு சட்டம் போடணும் குளிர் காலத்துல நிம்மதியா தூங்க கூட முடியலையே…!

anvar
செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பார், அவங்கள கூட வச்சுக்கலாம்..
தப்பை ஒத்துக்குறேன், ஆனா மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்ற ஆளயும் கூட வச்சிக்கலாம்,
ஆனா என்ன தப்பு செஞ்சாலும், அதுக்கு நாமதான் காரணம்னு நம்ம மேல திருப்புவாங்க பாரு.. அவங்கள மட்டும் கூட வச்சிக்காதே..நிம்மதியே போயிரும்.

Joe…😎😎
காயிதே மில்லத்தை விட பெரியார் பெரிய தலைவரா? ~ சீமான்
~ இவருக்கு தேவை இருந்தா காயிதே மில்லத்தை தூக்கி வச்சு பேசுவாராம்..
தேவை இல்லன்னா “முஸ்லீம்கள் சாத்தானின் பிள்ளைகள்”ன்னு சொல்வாராம்.
நாம அதை மறந்துட்டு ஓட்டு போடணுமாம்..
லாக் ஆஃப்